எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள், கலைஞர்கள் உள்ளிட்டோர் தங்களுக்கு வழங்கப்பட்ட விருதுகளை திரும்ப ஒப்படைக்கும் செயலை உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் மற்றும் அருண்ஜெட்லி ஆகியோர் கண்டித்து உள்ளனர்.
பிரபல கன்னட எழுத்தாளர் எம்எம்.கல்புர்கி சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம், உத்தரபிரதேசத்தின் தாத்ரியில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கூறி ஒருவர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் போன்றவை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து,சில எழுத்தாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட சாகித்ய அகாடமி விருது உள்ளிட்ட உயரிய விருதுகளை திரும்ப ஒப்படைத்து வருகின்றனர்.
இந்த சம்பவங்கள் தொடர்பாக உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
டெல்லி கேரள இல்லசோதனை விவகாரம் தொடர்பாக கேரள முதல்–மந்திரி உம்மன்சாண்டியிடம் எனது வருத்தத்தை தெரிவிக்க விரும்பினேன். இதுதொடர்பாக பீகார் தேர்தல் பிரசாரம் முடிந்ததும் அவரை சந்திப்பேன்.
இந்த விவகாரத்தில் கைது செய்யபட்ட இந்து சேனா தலைவர் விஷ்ணுகுப்தா மீது கடும்நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ்.பஸ்சியிடம் கூறியுள்ளேன். மேலும் இது போன்ற புகார்கள் எதிர்காலத்தில் வந்தால் அதில் கவனமாக இருக்குமாறும் கேட்டுக் கொண்டேன்.
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த வன்முறைகளில் ஆயிரக்கணக் கானோர் கொல்லப்பட்டு உள்ளனர். ஆனால் அப்போது அமைதியாக இருந்த எழுத்தாளர்கள், சினிமாதயாரிப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் விஞ்ஞானிகள் போன்றோர், தற்போது விருதுகளை திரும்ப ஒப்படைத்துவருகிறார்கள்.
இது தவறான அரசியல் சதியாகும். அசோகசின்னம் தாங்கிய எந்த ஒருவிருதும் தேசிய கவுரவமாகும். அவற்றை திரும்ப ஒப்படைப்பது, தேசத்தை அவமதிக்கும்செயல்.
இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.
விருதுகள் திரும்ப ஒப்படைக்கும் விவகாரத்தை நிதி மந்திரி அருண் ஜெட்லியும் கண்டித்து உள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியவர், ‘விருதுகளை ஒப்படைப்பவர்கள் எல்லாரும் தீவிர பா.ஜ.க எதிர்ப்பாளர்கள் ஆவர். இதில் சிலர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் வாரணாசியில் மோடிக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட்டனர்’
பீகார் தேர்தலில் பா.ஜ.க வை தோற்கடிக்கவே விருதுகளை திரும்ப ஒப்படைத்து வருவதாக கூறியவவர், விருதை ஒப்படைப்பவர்கள் வேறு காரியங்களுக்காக அரசியல் செய்துவருவதாகவும் கூறினார். மேலும் நாட்டில் சகிப்புத்தன்மை இல்லை என்ற கருத்தை நிராகரித்தவவர், நாடுமுழுவதும் அமைதியான சூழல் நிலவுவதாகவும் கூறினார்.
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |
மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ... |
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |
Leave a Reply
You must be logged in to post a comment.