இந்தியாவின் மக்கள்தொகை 121 கோடியாக அதிகரித்துள்ளது

கடந்த 10 ஆண்டில் இந்திய மக்கள்தொகை 18 கோடிக்கும் மேலாக அதிகரித்து 121 கோடியாக அதிகரித்துள்ளது . இது உலக மக்கள்தொகையில் 17.5 சதவீதம் ஆகும்.

புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இது தெரியவந்துள்ளது. இருந்தபோதிலும் 90 ஆண்டுகளில் முதல் முறையாக வளர்ச்சிவிகிதம் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது.

 

2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 62.37கோடி ஆண்களும், 58.65கோடி பெண்களும் இந்தியாவில் இருக்கின்றனர் . 2001-2011 வரையிலான 10 ஆண்டில் மட்டும் 18 கோடிக்கும் அதிகமாக மக்கள் தொகை உயர்ந்துள்ளது .

2001-ல் 21.15 சதவீதமாக இருந்த மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 2011-ல் 17.64 சதவீதமாக குறைந்துள்ளது .

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உத்தரப்பிரதேச மாநிலம் மிகவும் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமாகும். அங்கு 19 கோடியே 90 லட்சம் பேர் இருக்கின்றனர் .லட்சத்தீவில் மிகவும் குறைவான மக்கள்தொகை உள்ளது. அங்கு 64,429 பேர்தான் இருக்கின்றனர்.

உத்தரப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரம் மக்கள் தொகையை சேர்த்தால் அமெரிக்க மக்கள் தொகையைவிட அதிகமாகும்.

இந்தியாவில் அதிக மக்கள் தொகை நெருக்கம் உள்ள பகுதியாக தில்லியின் வடகிழக்கு பகுதியுள்ளது, ஒரு சதுர-கிலோ மீட்டருக்கு 37,346 பேர் அங்கு வாழ்கின்றனர் . குறைவான மக்கள் தொகை நெருக்கம் அருணாச்சல பிரதேசத்தின் திபங்க் பள்ளத்தாக்கில் இருக்கிறது . அங்கு ஒரு சதுர கிலோமீட்டருக்கு ஒருவர் மட்டுமே வசிக்கிறார் .

மேலும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை விட ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை மக்கள்தொகை கணக்கெடுப்பு குறிப்பிடுகிறது. கணக்கெடுப்பின்படி சமீபத்திய குழந்தைகள் விகிதம் 1000 ஆண்களுக்கு 914 பெண்களாக உள்ளது.

2001-ல் படித்தவர்களின் எண்ணிக்கை 64.83 சதவீதத்தில் 2011ல் 74.04 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது படித்தவர்களின்-எண்ணிக்கை 9.21 சதவீதமாக அதிகரித்திருப்பதை காட்டுகிறது.

உலகிலேயே சீனாதான் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு.

 

உலக மக்கள்தொகையில் 19.4 சதவீதம் பேர் அங்கு உள்ளனர்.இந்தோனேசியா, அமெரிக்கா. வங்கதேசம், பிரேசில், பாகிஸ்தான் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் ஒருங்கிணைந்த மக்கள் தொகையும் சீனாவின் மக்கள் தொகையும் கிட்டத்தட்ட சமமாக இருக்கும் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...