இரண்டு கண்களையும் இழந்து பெற்ற வெற்றியால் என்ன பயன்?

 பீகாரை 35ந்து வருடம் ஆண்ட காங்கிரசும் , 15 வருடங்கள் ஆண்ட லாலுவும், 10 த்து வருடங்கள் ஆண்ட நித்திசும், ஒருமுறைக் கூட தனித்து ஆட்சி அமைக்காத பாஜக.,வின் பலத்தை கண்டு அஞ்சி அமைத்த மகாகூட்டணி பீகாரில் ஆட்சியை பிடித்துள்ளது.

 

மகா கூட்டணியின் வெற்றி வாழ்த்துகளுக்கு உரியதே, அதே நேரத்தில் பாஜக.,வின் தோல்வி தூற்றுதளுக்கு உரியதல்ல, பாஜக.,வின் மீதான தூற்றுதலும், மோடியின் மீதான மதவாத தாக்குதலும்  இன்று நேற்று அல்ல  பல வருடங்களாகவே தொடர்கிறது, இருப்பினும் இவை அனைத்தும்  பாஜக.,விற்கு  ஏணிப்படிகளாகவே அமைந்துள்ளது.

 

2002 ம் ஆண்டு கோத்ரா கலவரத்தை தொடர்ந்து அன்றைய குஜராத் முதல்வராக இருந்த மோடியின் மீது மதச் சார்பின்மை என்கிற குடையின் கிழ் ஒருங்கிணைந்த பெருவாரியான அரசியல் கட்சிகளும், செய்தி ஊடகங்களும் சேற்றைத்தான்  வாரி இறைத்தன. குஜராத் உள்ளாட்சி தேர்தல்களிலும் , இடைத்தேர்தல்களிலும் ஏற்ப்படும் சிறு சிறு தோல்விகளை  கூட மோடிக்கு எதிரான மக்களின் எண்ண ஓட்டமாகவே காட்ட முயன்றனர். இருப்பினும் தொடர்ந்து நான்கு சட்ட மன்ற தேர்தல்களிலும்  வெற்றியை பெற்று தன் மீது வீசப்பட்ட சேறுகளை எல்லாம் தாமரையாக மாற்றிக் காட்டியவர் மோடி.

 

அதே போன்று 2014ம் ஆண்டு பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப் பட்டபோதும் , இது தவறான முடிவு, குஜராத்தை டெல்லி ஏற்காது, இந்திய மக்கள் குஜராத்திகளை போன்று மதவாதத்தை எல்லாம் அனுமதிக்க மாட்டார்கள். பாஜக கூட்டணிக்கு  படுதோல்வியை பாடமாக புகட்டுவார்கள்  என்றெல்லாம் ஆருடம் கூறினார்கள். இதில் மதவாதத்தை காரணம் காட்டி  மோடியை குஜராத்துக் குள்ளேயே முடக்கிவிட்டு தான் பிரதமர் வேட்பளராக ஆகிவிட வேண்டும் என்று துடித்த நிதிஸ் .  பாஜக கூட்டணிக்குள் இருந்து கொண்டே மோடிக்கு எதிரான பிரச்சாரத்தை தீவிரப் படுத்தினார். கூட்டணிக்குள் குழப்பத்தையும் உண்டு பண்ணினார்.

 

ஒருவழியாக நரேந்திர மோடி பாஜக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் அவர் மீது கொண்ட தீராத வஞ்சத்தால் பாஜக.,வுடனான 17 வருட நடப்பை முறித்துகொண்டு வெளியேறினர்.  அவர்  பீகாருக்குள்ளேயே  வரக்கூடாது . பீகாரிகள் அவரை  நிராகரிப்பார்கள் என்றார்.

 

ஆனால் இந்தியா பாஜக.,வுக்கு தனித்து 282 தொகுதிகளிலும், பாஜக கூட்டணிக்கு 336 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை தந்து மோடியை ஏற்றுக்கொண்டது, பீகாரும்  40 இல் 31 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை தந்து அங்கீகரித்தது. நிதிசின் ஐக்கிய ஜனதா தளத்துக்கோ வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றியை தந்து நிராகரித்தது.

 

மோடியின் மீது கொண்ட வஞ்சத்தால் பாராளுமன்றத் தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்த நிதிஸ். பெருந்தோல்வியால் பெற்ற அவமானத்தால் இனி தேர்தலில் வென்றே முதல்வர் ஆவேன்  என்று  சூளுரைத்து முதல்வர் பதவியையும்   துறந்தார்.

 

தற்காலிக பொம்மை முதல்வராக நியமிக்கப்பட்ட சித்த ராம் மஞ்சியின் செயல்பாடோ  கட்சியிலும் , ஆட்சியிலும் நிதிசை ஒழித்துக் கட்டும் விதமாகவே அமைந்தது. இறுதியில் பிரதமர் வேட்பாளராக கனவு கண்ட தன்னால் பீகாரின்  முதல்வர்  வேட்பாளராக  கூட ஆக  முடியாமல் போய்விடுமோ  என்று அஞ்சி   தனது  சூளுரையை  மறந்து  மஞ்சியுடன்  மல்லுக்கட்டி மீண்டும் பீகார் முதல்வர் ஆனார் .

 

ஆக மொத்தத்தில் மோடியின் மீது கொண்ட வஞ்சத்தால் நிதிஸ் இழந்தது ஏறாளம்! ஏறாளம்!!. இறுதியில் தனக்கு இரண்டு கண் போனாலும் பரவாயில்லை  எதிரிக்கு ஒரு கண்ணாவது போகவேண்டும் என்று மீண்டும் வஞ்சம் கொண்டு வெகுண்டு எழுந்த நிதிஸ் அமைத்ததுதான் மகாகூட்டணி.

 

பீகாரில் காட்டுத்தர்பார் நடத்தி , மாட்டுத் தீவன  ஊழலில் ஆறு வருடம் சிறை சென்ற, பீகாரிகளால் முற்றிலும்  நிராகரிக்கப்பட்டு அரசியல் அஸ்த்தமனத்தில் இருந்த லல்லு  பிரசாத் யாதவ்வும் காங்கிரசும் இந்த மகா கூட்டணியில் இணைந்தனர்.

 

அமைத்தது மகா கூட்டணியாக இருந்த போதிலும், நிதிஸ்க்கு வாக்குகளை அள்ளித்தந்தது தங்கள் மகா கூட்டணியினரை  மறைமுகமாக அதிகம் விமர்சித்தன் மூலமாகவே.

 

“பத்து வருடங்களுக்கு முன்பு மாநிலம்  பெண் கல்வியில் பின் தங்கியிருந்தது (லல்லு ஆட்சி), இப்போது  மாநிலத்தை முன்னுக்கு கொண்டு வந்துள்ளோம் ஒவ்வொரு பெண்ணும் சைக்கிளில் பள்ளிக்கு செல்கிறாள் இது எங்கள் சாதனை”.

 

“60பது வருடமாக பின்தங்கியிருந்த மாநிலத்தை (காங்கிரஸ்  ஆட்சி)  தரமான சாலைகள் அமைத்து  உள்கட்டமைப்பில்  முன்னுக்கு நாங்கள்  கொண்டு வந்துள்ளோம்”. என்றார் நிதிஸ்… இதில் நாங்கள்  நாங்கள் என்று  கூறியது பாஜக.,வையும்  சேர்த்துதான். பாஜக உடனான பத்து வருட கூட்டணி ஆட்சியில் நிதிஸ்  நடத்திய சாதனைகளே இவை. 

 

பத்து வருட கூட்டணி ஆட்சியில் அங்கம் வகித்த பாஜக.,வின் மீது எந்த  ஊழல்  புகரும்  எழவில்லை?. மத்தியில் 17 மாத பாஜக அரசின்  மீதும் எந்த ஊழல் புகரும் எழவில்லை?.  முற்றிலும் படிக்காதவர்களே நிறைந்த மாநிலத்தில் இட ஒதுக்கிடு  குறித்த பிரச்சனை  எழுவதற்கு வாய்ப்பே இல்லை!. ஜாதிய  படுகொலைகளும், கொலை கற்பழிப்புகளும்,  துப்பாக்கிகளும்,  நாட்டு வெடிகுண்டுகளும் அதிகம் புழங்கும் மாநிலத்தில் தாத்ரி  போன்ற பக்கத்து மாநில படுகொலைகள் எல்லாம் எதிரொலிக்க வாய்ப்பே  இல்லை?.

 

மகா கூட்டணி, யாதவ வாக்குகளையும், சிறுபான்மையினர் வாக்குகளையும் ஒருங்கிணைத்ததாலும், 44 சதவிதத்தினர் வாக்களிப்பதை தவிர்த்ததாலும் பாஜக தோல்வியை தழுவியது.

 

மேலும் இங்கே 24 சதவித வாக்கு வங்கியுடன் பாஜக.,வுக்கு ஏற்ப்பட்டுள்ள தோல்வி தற்காலிக பின்னடைவே  கண் ஒன்றும் பறிபோய் விடவில்லை. ஆனால் 16 சதவித வாக்கு வங்கியுடன் நிதிஸ் வெற்றி  பெற்ற போதிலும்  இரண்டு  கண்ணையும் இழந்துள்ளதாகவே தெரிகிறது. பீகாரில் பாஜக.,வா ஐக்கிய ஜனதா தளமா  என்றிருந்த நிலையை மாற்றி அரசியல் அஸ்த்தமனத்தில் இருந்த லல்லுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை கூட்டணிக்கு இழுத்து வந்து 80 தொகுதிகளில் வெற்றி பெறச் செய்து, ஐக்கிய  ஜனதா தளம் அதை விட குறைவாக 71. தொகுதிகளில் வெற்றிப் பெற்றதன் மூலம் ஒரு கண்ணை இழந்துவிட்டது.

 

என்னதான் லல்லு,. நித்ஸ் குமாரை பெருந்தன்மையாக ஆட்சி அமைக்க அனுமதித்தாலும் தனது காட்டு தர்பாரை, தனது குடும்ப  ஊழல் அரசியலை 6 மாதத்திலோ,  1 வருடத்திலோ ஆரம்பித்து விடுவார். இவர்களை நிதிஸ் கட்டுப்படுத்தினார் என்றால் அன்றே ஆட்சி பறிபோகும், விட்டு விட்டார் என்றால் கரை படியாத கைக்கு சொந்தகாரர் என்கிற அவரது அடையாளமே பறிபோகும் எப்படியும் நிதிஸ்க்கு மற்றொரு கண்ணும் பறிபோவது உறுதியே.

தமிழ்த்தாமரை VM வெங்கடேஷ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...