தனி நாடு கோரும் சீக்கிய அமைப்புகளை ஒடுக்க வேண்டும்

 இந்தியாவில் சீக்கியர்கள் வாழும்பகுதிகளை ஒருங்கிணைத்து காலிஸ்தான் தனி நாடு கோரும் பிரசாரத்தை இங்கிலாந்தில் நடத்திவரும் சீக்கியர் அமைப்புகளை ஒடுக்க வேண்டும் என அந்நாட்டு பிரதமர் கேமரூனிடம் பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தியுள்ளார்.

இங்கிலாந்து பிரதமர் கேமரூனை சந்தித்துபேசிய பிரதமர் மோடி, இங்கிலாந்தில் செயல் படும் சீக்கிய தீவிரவாத அமைப்புகளை ஒடுக்க கடும் நடவடிக்கைதேவை என வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் பஞ்சாப் மற்றும் சீக்கியர் வாழும்பகுதிகளை ஒருங்கிணைத்து காலிஸ் தான் தனி நாடு கோரி முன்னர் ஆயுத போராட்டம் நடைபெற்றது. 1980களின் தொடக்கத்தில் இந்த ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்தாலும் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா  நாடுகளில் குடியேறிய சீக்கியர்கள் இந்தபிரசாரத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தும் டிவி சேனல்களை கூட இங்கிலாந்தில் சீக்கிய அமைப்புகள் தொடங்கியுள்ளன. பாகிஸ்தான் உளவுஅமைப்பான ஐ.எஸ்.ஐ. உடன் சேர்ந்து இந்தியாவில் நாச வேலைகளுக்கு இந்த காலிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் திட்ட மிட்டுள்ளனர். இதனால் இந்த அமைப்புகளை இங்கிலாந்து அரசு ஒடுக்கவேண்டும் என்று கேமரூனிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...