சகிப்பின்மை குறித்த நடிகர் அமீர்கானின் கருத்து நாட்டிற்கும் அவருக்கும் இழுக்கு தேடித்தந்துள்ளது என்று மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சர் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
"அமீர்கானின் கூற்று அவரது தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம், ஆனால் நாட்டிற்கு அக் கருத்து பெரிய அளவில் இழுக்கு தேடித்தந்துள்ளது. ஒரு பிரபலகலைஞர் இவ்வளவு தீவிரமான கருத்தை வெளியிடுகிறார் என்றால் இதனால் பலரும் புண் படுவதும், வருத்தமடைவதும் தவிர்க்க முடியாததே.
அவரது கூற்றை ஏற்க முடியாததற்கு காரணம், நம் நாடு சகிப்பு தன்மைக்கான வரலாறு கொண்டது. இன்றும் சகிப்புத்தன்மை உள்ளது. அமீர்கானின் கருத்து நாட்டிற்கும், ஏன் அவருக்குமேகூட இழுக்கு தேடித் தந்துள்ளது" என்றார்.
பாஜக எம்.பி மற்றும் இந்துத்துவா தலைவர் யோகி ஆதித்யா நாத், “இந்தியாவை விட்டு அவர் செல்வதை ஒருவரும் தடுக்கவில்லை. மேலும், நாட்டின் மக்கள்தொகையை குறைக்க இது உதவும்” என்று தெரிவித்தார்.
ஸ்மிருதி இரானி தாக்கு: ""மத்திய அரசின் தூய்மைஇந்தியா திட்டத்தின் தூதராக ஆமீர் கான் இருக்கிறார். அவ்வாறு இருக்கும் போதே, அரசுக்கு எதிராக அவரால் கருத்துத்தெரிவிக்க முடிகிறது. அரசின் சகிப்புத் தன்மைக்கு இதனைவிட சிறந்த உதாரணம் வேறென்ன இருக்க முடியும்?'' என்றார்.
இதேபோல், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, நடிகர்கள் ரிஷி கபூர், அனுபர்கெர் உள்ளிட்டோரும் ஆமிர்கானின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |
பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.