டி.டி.சி.ஏ., எனப்படும், டில்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் நடந்த முறை கேடுகள் பற்றி விசாரணை நடத்திய, நிபுணர்குழு அறிக்கையில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் பெயர் இடம் பெறவில்லை.
சமீபத்தில், டில்லி முதல்வர் கெஜ்ரிவாலின் முதன்மைச்செயலர் ராஜேந்தர் குமார் அலுவலகத்தில், சி.பி.ஐ., அதிரடி சோதனை நடத்தியது. அப்போது, மத்திய நிதிய மைச்சர் அருண் ஜெட்லி, 1999 முதல், 2013 வரை, டி.டி.சி.ஏ., தலைவராக இருந்தபோது, நிகழ்ந்த முறைகேடுகள் தொடர்பான கோப்புகளை எடுக்கவே, சி.பி.ஐ., சோதனை நடத்தியதாக, முதல்வர் கெஜ்ரிவால் குற்றஞ் சாட்டினார்.இதையடுத்து, டி.டி.சி.ஏ., முறைகேடுகள் பற்றி விசாரிக்க, டில்லி கண்காணிப்புத் துறை முதன்மைச் செயலர் சேத்தன்சாங்கி தலைமையில், மூன்று பேர் குழுவை, டில்லி அரசு நியமித்தது. இக்குழு, விசாரணை முடிவில், 237 பக்க அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.அந்தஅறிக்கையில், எந்த இடத்திலும், அருண் ஜெட்லியின் பெயர் இடம் பெறவில்லை.
இது குறித்து பாஜக செய்தி தொடர்பாளர் எம்.ஜே.அக்பர் கூறியதாவது; டி.டி.சி.ஏ., விவகாரத்தில், உண்மை வெளிவந்துவிட்டது. டில்லி அரசு நியமித்த விசாரணை கமிஷன் அறிக்கையில், மத்திய நிதிய மைச்சர் அருண் ஜெட்லியின் பெயர் இடம்பெற வில்லை. அவருக்கு எதிராக எவ்வித குற்றச் சாட்டும் கூறப்பட வில்லை. அருண்ஜெட்லி மீது வீண்பழி சுமத்திய, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மன்னிப்புகேட்க வேண்டும்.
கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ... |
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |
உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.