சம்ஸ்கார் பாரதி என்ற அமைப்பின் சார்பில் பாரதபண்பாடு, கலாச்சாரங்களின் ஒருமைப் பாட்டை ஏற்படுத்தும் வகையில் பண்பாட்டு பெருமைமிக்க திருத்தலங் களையும், வீர வரலாறுகளையும், காவிய புருஷர் களையும் நினைவுகூறும் வகையிலும் கன்னியா குமரியில் இருந்து கர்நாடக மாநிலம் கோக்கர்ணம் வரை பாரதபண்பாட்டு கலாச்சார ஒருமைப்பாட்டு யாத்திரை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி இந்த யாத்திரையின் தொடக்கவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு கன்னியாகுமரி காந்தி மண்டபம் அருகில் நடக்கிறது.
இந்தவிழாவில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு யாத்திரையை தொடங்கி வைத்து பேசுகிறார்.
கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் இந்தயாத்திரை விவேகானந்தபுரம், வட்டக்கோட்டை, கொட்டாரம், சாமிதோப்பு, சுசீந்திரம், நாகர் கோவில், தக்கலை, பத்மநாபபுரம், மார்த்தாண்டம், களியக்கா விளை, நெய்யாற்றின்கரை, ஆற்றிங்கல், கொல்லம், ஆலப்புழை, எர்ணாகுளம், கோழிக்கோடு, தலச்சேரி, காசர்கோடு, உடுப்பி வழியாக வருகிற 17–ந் தேதி கர்நாடக மாநிலம் கோக்கர்ணம் சென்று அடைகிறது.
பின்னர் அங்குஇருந்து புறப்பட்டு சிக்மங்கர், பாலக்காடு, திருச்சூர், பெரம்பாவூர், கோட்டயம், கொட்டாரகரா, நெடுமங்காடு, நாகர்கோவில் வழியாக அடுத்தமாதம் (பிப்ரவரி) கன்னியாகுமரியில் வந்து நிறைவடைகிறது.
கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ... |
இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ... |
பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.