பதன்கோட்டில் 3வது நாள் தேடுதல்வேட்டையை தொடர்ந்த ராணுவம் அனைத்து தீவிர வாதிகளையும் சுட்டுக் கொன்று, விமானதளத்தை மீட்டுள்ளது.
நேற்று இரவு தேடுதலை நிறுத்தியிருந்த ராணுவம் இன்று காலை முதல் தொடர்ந்தநிலையில், மாலை 4 மணியளவில் ஆபரேசன் முற்றுபெற்றது. பதன் கோட் விமானப் படை தளத்தில், 3வது நாளாக இன்று காலை 8.30 மணியளவில் தேடுதல்வேட்டையை ராணுவம் தொடங்கியது. ஏற்கனவே, 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், லெப்டினன்ட் கர்னல், நிரஜ்ஜன் குமார் உட்பட 7 ராணுவ வீரர்கள், வீர மரணம் அடைந்திருந்தனர்.
மேலும் தீவிரவாதிகள் பதுங்கி யிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், இன்றும், பதன் கோட் விமானப்படை தளத்தில் தேடுதல்வேட்டை நடந்தது. சுற்றிலும், மரங்கள்அடர்ந்த 2000 ஏக்கர்பகுதி என்பதால், படையினர் காலைவேளையில் தேடுதலை தொடங்கினர்.
ராணுவ தரப்பில் உயிரிழப்பை தவிர்ப்பதற்காக, அவசரப் படாமல் ஆபரேசன் நடந்ததாக கூறப்பட்டது. இதனிடையே காலை 10.30 மணியளவில் கடும் துப்பாக்கிசண்டை நடைபெற்றதாகவும், துப்பாக்கிவெடிக்கும் சத்தம் கேட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்தன.
2 முறை வெடிகுண்டு வெடித்தசத்தமும் கேட்டுள்ளது. இதனிடையே மாலை 4 மணியளவில் ஆபரேசன் முடிவுக்குவந்துள்ளது. மேலும் 2 தீவிரவாதிகள் சடலங்களும் கண்டெடுக்கப்பட்ட நிலையில், ஊடுருவிய ஆறுதீவிரவாதிகளும் கொல்லப்பட்டதாக அறிவிப்பு வெளியாகி யுள்ளது. இருப்பினும், விமானப்படை தளம் இன்னும் பயன் பாட்டுக்கு திறக்கப்படவில்லை.
இதனிடையே பதன்கோட் தீவிரவாத தாக்குதல் சம்பவத்துக்கு ஜம்முகாஷ்மீரை மையமாக கொண்டு இயங்கும் ஐக்கிய ஜிகாத்கவுன்சில் அமைப்பு பொறுப் பேற்றுள்ளது. இதுகுறித்து ஐக்கிய ஜிகாத் அமைப்பின் செய்திதொடர்பாளர் சையது சதாகட் ஹூசைன் அறிக்கை வெளியி ட்டுள்ளார்.
ஐக்கிய ஜிகாத்கவுன்சில் அமைப்பானது முத்தா ஹிதா ஜிகாத் கவுன்சில் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த தீவிரவாத ஜிகாத் அமைப்பானது 1994-ல் உருவாக்கப் பட்டது. ஹிஜ் புல்-முஜாஹிதீன் அமைப்பின் தலைவரான சையது சலா ஹூதின்தான் ஐக்கிய ஜிகாத் கவுன்சிலுக்கும் தற்போது தலைவராக உள்ளார். இந்திய எல்லைக் குட்ப்பட்ட ஜம்மு காஷ்மீர் பகுதியை மையமாக கொண்டு இயங்கிவருகிறது.
கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ... |
பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ... |
கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.