பிரதமர் நரேந்திர மோடி கடந்த டிசம்பர் 25-ம்தேதி பாகிஸ்தானுக்கு திடீர்பயணம் மேற்கொண்டு பிரதமர் நவாஸ் ஷெரீப்பையும் சந்தித்தார். மோடியின் இந்த பயணத்தை ராஜதந்திர நடவடிக்கை என பாஜக., கூறியது. இருப்பினும் எதிர்க் கட்சியான காங்கிரஸ் கட்சி விமர்சித்தது. மேலும் பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானதளத்தில் பயங்கரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்திய சம்பவத்தை அடுத்து பிரதமரின் பயணத்தின் மீது மேலும் கேள்விகள் எழுப்பப் பட்டன.
இந்நிலையில், பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் பிரதமர் மோடியின் பாகிஸ்தான் பயணத்தை ஆதரித்துள்ளார். தன்னை பொறுத்த வரையில் இது ஒரு நல்லமுயற்சி என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தான் நாட்டிற்குள் ஜனநாயககூறுகள் வலிமை பெறுவதுதான் பிரச்சனைகளை தீர்ப்பதற்கும் மற்றும் இரு நாடுகளிடையேயான உறவு மேம்படுவதற்கும் முக்கியவழி என்று நிதிஷ்குமார் கூறியுள்ளார்.
குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ... |
ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ... |
மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.