ஜல்லிக்கட்டு தடை எதிரொலி தமிழக பாஜக தலைவர்கள் இன்று டெல்லி செல்கிறார்கள். தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி பெற்று கொடுத்ததால் பாரதிய ஜனதா கட்சி மிகவும் உற்சாகத்துடன் இருந்தது .
.
ஆனால் சுப்ரீம்கோர்ட்டு ஜல்லிக்கட்டு நடத்த இடைக்கால தடை விதித்தது மிகவும் கவலையடைய வைத்துள்ளது
தமிழக சட்டசபைக்கு தேர்தல் வர உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு விவகாரம் மிகப் பெரிய சவாலாக மாறி உள்ளது. ஜல்லிக்கட்டுக்கு அனுமதிபெற்று கொடுத்தால்தான் மக்களிடம் ஆதரவை பெறமுடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது.
எனவே இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு பாஜக தயாராகி வருகிறது. தமிழக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், மோகன் ராஜுலு, டெல்லி செல்ல உள்ளனர்.
டெல்லியில் அவர்கள் பாஜக மூத்த தலைவர்களை சந்தித்து ஜல்லிக் கட்டு நடத்த அனுமதி வழங்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த திட்டமிட்டுள்ளனர்.
தமிழக பிஜேபி தலைவர்கள் முதலில் பிஜேபி தேசிய தலைவர் அமித்ஷாவை சந்திக்க உள்ளனர். அப்போது அவரிடம், ஜல்லிக் கட்டு போட்டியில் காளைகள் துன்புறுத்தப்படுவது இல்லை. மாறாக இது ஒரு பாரம்பரியமிக்க வீரவிளையாட்டு என்பதை விளக்கமாக எடுத்துச் சொல்ல முடிவு செய்துள்ளனர்.
தேவைப்படும் பட்சத்தில் பிரதமர் மோடியையும் தமிழக பாஜக தலைவர்கள் சந்தித்து ஜல்லிக் கட்டு தொடர்பாக விளக்கமளிக்க தயாராக உள்ளனர். பிரதமரிடம் அவசரசட்டம் கொண்டுவருவதை பற்றியும் அவர்கள் விவாதிக்க முடிவு செய்துள்ளனர்.
நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ... |
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |
இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.