இரண்டு நாள் பயணமாக இஸ்ரேல், பாலஸ்தீனம் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ரியாத் அல்-மாலிகியை சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார்.
பாலஸ்தீனத்துக்கு ஞாயிற்றுக் கிழமை சென்ற சுஷ்மா ஸ்வராஜை அந்நாட்டு வெளியுறவுத்துறை துணை அமைச்சர் மேஸன் ஷமியே வரவேற்றார்.
இதையடுத்து, பாலஸ்தீன தலை நகர் ரமலாவில் உள்ள மகாத்மா காந்தியின் மார்பளவு சிலைக்கு சுஷ்மா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பிறகு, பாலஸ்தீன விடுதலை இயக்க தலைவரான முகமது யாசீர் அராஃபத்தின் கல்லறைக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். பாலஸ்தீன மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களை அந்நாட்டில் இந்தியா செயல் படுத்தி வருகிறது. அந்நாட்டில் இந்திய அரசால் அமைக்கப்பட்ட மின்னணு கற்றல் மற்றும் புத்தாக்கமையத்தை சுஷ்மா திறந்து வைக்க உள்ளார்.
இரு அமைச்சர்களின் சந்திப்பு குறித்து பாலஸ்தீன வெளியுறவுத் துறை ஊடகப்பிரிவு தலைவர் வால் அல்-பட்டரேகி கூறுகையில், "பாலஸ்தீனத்துக்கு அளித்துவரும் ஆதரவை இந்தியா எப்போதும் தொடரும் என்று சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார். இந்தக்கருத்து திருப்தி அளிப்பதாக அமைச்சர் ரியாத் அல்-மாலிக் தெரிவித்தார்' என்றார்.
சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ... |
சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ... |
கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.