குஜராத் கலவருமும் கூறப்பட்ட பொய்களும், எழுதப்பட்ட புனைக் கதைகளும்

பொய்கள்:

1. 2000 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டார்கள்.
2. குஜராத்தே தீப்பற்றி எரிந்தது.
3. இஸ்லாமியர்கள் மட்டும்தான் கொல்லப்பட்டார்கள்
4. போலீஸ் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருந்தார்கள்.
5. அரசாங்கமும் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருந்தது.
6. 2002ல் குஜராத் வாழ்வதற்கு தகுதியற்று இருந்தது.
7. நரேந்திர மோதி “ ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு” என்று சொன்னார்.
8. கௌசர் பானு என்ற கர்பினிகயின் வயிற்றில் இருந்து குழந்தையை பரித்தெடுத்து கொடூர கொலையில் ஈடுபட்டது.
9. இஸ்லாமியர்கள் மட்டுமே சொத்துகளை இழந்தனர்.
10. வாஜ்பாய் அவர்கள் மோதி ராஜ தர்மத்தை காக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.
11. மோதி கலவரத்திற்காக வருத்தம் தெரிவிக்கவில்லை.
12. பாதிக்கப்பட்ட யாருக்குமே நீதி வழங்கப்படவில்லை.
13. இதுதான் இந்தியாவில் நடந்த கோர படுகொலை.


——————————————————————————–
உண்மைகள் ஆதாரத்துடன்:
—————————————–


1. 11/05/2005 பாராளுமன்றத்தில் காங்கிரஸின் ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால் அவர்கள் தாக்கல் செய்த எழுத்துப் பூர்வமான அறிக்கைபடி குஜராத் கலவரத்தில் இறந்தவர்கள் 790 இஸ்லாமியர்களும், 254 இந்துகளும்.


2. 2005 காங்கிரஸ் அரசாங்க தகவல் அறிக்கைபடி குஜராத்தில் மொத்தம் உள்ள 25 மாவட்டங்கள், 240 நகராட்ச்சிகள், 18600 கிராமங்களில். கலவரம் நடந்தது 90 இடங்களில் மட்டுமே. இது ஒட்டு மொத்த குஜராத்தில் 2%தான்.


3. கலவரத்தை கோத்திரா இரயில் எரிப்பின் மூலம் தூண்டியது இஸ்லாமியர்கள்தான். கலவரத்தின் முதல் மூன்று நாட்கள் இஸ்லாமியர்கள் இந்துகளை ஹிமத்நகர், டனில்மிடா, சிந்தி மார்க்கெட் போன்ற இடங்களில் படுகொலை செய்தார்கள்.


4. 28/4/2002 Times of India நாளிதழில் வெளியிடப்பட்ட செய்திப்படி 170 பேர் போலீஸ் துப்பாக்கி சூட்டில் இறந்துள்ளனர். இதில் அதிகப்படியானோர் இந்துகள். போலிஸ்தரப்பிலும் 200 பேர் இறந்துள்ளனர். 552 போலீஸ் காயப்பட்டனர் அதில் 83 பேர் அதிகாரிகள். 22/5/2002 இந்தியா டுடேவும் இதை உறுதி செய்தது.


5. 22/11/2002ல் இந்தியா டுடே இதழில் வெளிவந்த சர்வேப்படி 65% பேர் கலவரத்தின் போது அரசு சிறப்பாக செயல்பட்டது என்றும் 21% பேர் அரசு பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தது என்றும் 15% பேர் மட்டுமே அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இந்த சர்வேவை எடுத்தது Aaj Tak மற்றும் India Today Weekly.


6. 25/11/2002 இந்தியா டுடே எடுத்த கருத்து கணிப்பு படி 68% மக்கள் இதில் இஸ்லாமியர்கள் 56% பேர் குஜராத்தில் மகிழ்ச்சியாக வாழ்கிறோம் என்று வாக்களித்துள்ளனர்.


7. ”ஒவ்வொரு வினைக்கு எதிர்வினை உண்டு” என்று மோதி எந்த ஒரு இடத்திலும் சொல்லவில்லை. அதை நீதி மன்றங்களிலும் ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளனர்.


8. 2/3/2002ல் கர்பினி கௌசர் பானுவின் உடல் பிரேத பரிசோதனை செய்த Dr. J.S.Kanoria தாக்கல் செய்த அறிக்கைப்படி அப்பெண்ணின் வயிற்றில் குழந்தை இருந்தது. அப்பெண் தீக் காயங்களினால்தான் இறந்தார். அப்பெண் மர்ம உறுப்பை யாரும் சிதக்கவில்லை என்பதை தெள்ள தெளிவாக கூறியுள்ளார்.


9. 5/3/2002 வெளிவந்த Times of India நாளிதழ்படி 10000 இந்துகள் வீடிழந்தனர். 25/4/2002 வெளிவந்த நாளிதழ்படி 40000 இந்துகள் வீடிழந்தனர்.


10. உண்மையான வாஜ்பாயின் அறிக்கை யாதென்றால் “ஒவ்வொரு முதலமைச்சரும் மதம், இனம், சாதி கடந்து ராஜ தர்மத்தை பின்பற்ற வேண்டும். மோதியும் அதை செய்திருப்பார் என்று தீர்க்கமாக நம்புகிறேன்.”


11. மார்ச் 2002 விதர்பா பவனில் நரேந்திர மோதி வெளியிட்ட அறிக்கை “கோதிரா இரயில் எரிப்பு சம்பவமாக இருந்தாலும் இல்லை அதன் பின் நடந்த கலவரமானாலும் இம்மாநிலத்தின் கௌரவத்தை சீர்குலத்துவிட்டது. நடந்தது மனிதத்திற்கு அப்பார்பட்ட செயல்”


12. 332 இந்துகளும் 111 இஸ்லாமியர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களை கைது செய்து நீதி மன்றங்களில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதில் பல பேருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...