பிரான்ஸிடமிருந்து 36 ரபேல் ஜெட் போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந் தத்தில் கையெழுத்திட்டுள்ளது. டெல்லியில் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் ஹொலாந்தே ஆகியோர் முன்னிலையில் பாதுகாப்பு அமைச்சர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டனர்.
இதனையடுத்து இருநாட்டுத் தலைவர்களும் கலந்துகொண்ட செய்தியாளர்கள் சந்திப்பில் மோடி கூறும்போது, “பிரான்சிடமிருந்து 36 ரபேல் ஜெட் போர்விமானங்களை வாங்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் இதுகுறித்த விலை விவகாரங்கள் இன்னமும் முடிவடையவில்லை, இதற்கும் உடனடி தீர்வு காணப்படும்” என்றார்.
பிரான்ஸ் அதிபர் ஹொலாந்தே கூறும்போது, “இந்த ரபேல் ரக ஜெட் போர் விமானங்கள் தான் தற்போது சிரியாவில் ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான தாக்குதலில் ஈடுபடுத்த ப்பட்டுள்ளது. ஐஎஸ்-க்கு எதிராக இந்த ஜெட் போர் விமானங்களின் திறன் நிரூபிக்கப்பட்ட ஒன்று. இதனை இந்தியாவுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி யடைகிறோம்.
இந்த ஒப்பந்தம் இரண்டு விஷயங்களை பிரதிநிதித்துவம் செய்கிறது. பிரான்ஸ் தொழிற்துறையின் மீது இந்தியா கொண்டுள்ள நம்பிக்கை மற்றும் இந்தியாவுக்கு தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்வதில் பிரான்ஸின் நம்பிக்கை ஆகிய இரண்டும் முக்கியமானது. மேக் இன் இந்தியா திட்டத்தில் பிரான்ஸ் பங்கு பெற விரும்புகிறது” என்றார்.
அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ... |
இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ... |
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.