அம்பேத்கரின் படைப்புகளையும், உரைகளையும் மத்திய அரசு மறு பதிப்பு செய்கிறது

சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் 125ஆவது பிறந்ததினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவரது படைப்புகளையும், உரைகளையும் மறு பதிப்பு செய்வதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

 இதற்கு அனுமதிகோரி, அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் ஆகியோருக்கு மத்தியஅரசு கடிதம் எழுதியுள்ளது.

 இது தொடர்பாக அவர்களுக்கு மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

 பிரதமர் நரேந்திரமோடி வெளியிட்ட அறிவிப்பின்படி, டாக்டர் அம்பேத்கரின் 125ஆவது பிறந்ததினம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் தேதி முதல், வரும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. தபால் தலைகள் வெளியிடப்படுகின்றன.

 இந்நிலையில், டாக்டர் அம்பேத்கர் பதிப்பக குழுவுடன் கடந்த 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8ஆம் தேதி நடைபெற்ற சந்திப்பின்போது, ஆங்கிலத்தில் இருக்கும் அம்பேத்கரின் படைப்புகளும், உரைகளும் மறுபதிப்பு செய்வதுதொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டன.

 இதனிடையே, மகாராஷ்டிர கல்வித் துறையால் கடந்த 2013ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட அம்பேத்கரின் படைப்புகளையும், உரைகளையும் மறு பதிப்பு செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதித்து மாநில உயர்கல்வி, தொழில் கல்வித் துறை முதன்மைச் செயலர் கடந்த 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் உத்தரவு பிறப்பித்தார். இதுதொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரும், நானும் ஆலோசனை நடத்தினோம். அப்போது, அம்பேத்கரின் படைப்பு களையும், உரைகளையும் மறுபதிப்பு செய்வதற்கு அனுமதிகோருவது என்று முடிவு செய்யப்பட்டது.

 ஆதலால், மகாராஷ்டிர கல்வித் துறையால் 2013ம் ஆண்டு வெளியிடப்பட்ட அம்பேத்கரின் படைப்புகள் மற்றும் உரைகளை மறு பதிப்பு செய்வதற்கு மத்திய அரசுக்கு நீங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த கடிதத்தில் தாவர் சந்த் கெலாட் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...