குடிமக்களின் கருத்துச்சுதந்திரம் பறிக்கப்பட வில்லை

மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான ஆட்சியில் குடிமக்களின் கருத்துச்சுதந்திரம் பறிக்கப்பட வில்லை என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி தெரிவித்தார்.

தில்லியில் குடியரசு தினக் கொண்டாட்டத்தை யொட்டி, ராஜபாதையில் நடைபெற்ற நிகழ்வில் பாஜக மூத்த தலைவர் எல்கே. அத்வானி, பாஜக தேசியத்தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து, நிகழ்வு முடிந்ததும் பிருத்விராஜ் சாலையில் உள்ள தனது இல்லத்தோட்டத்தில் குடியரசு தினத்தையொட்டி, தேசிய மூவர்ணக் கொடியை அத்வானி ஏற்றி மரியாதைசெலுத்தினார். இந்த நிகழ்வில் அத்வானியின் குடும்பத்தினர், மத்திய இணை அமைச்சர் ராஜீவ் பிரதாப்ரூடி, பாஜக மூத்த உறுப்பினர் நஜ்மா ஹெப்துல்லா, அத்வானிக்கு பாதுகாப்பு அளித்துவரும் தேசியப் பாதுகாப்புப் படையினர், மத்திய ரிசர்வ் காவல்படையினர், பாஜக தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் அங்கிருந்த செய்தியாளர்களிடம் அத்வானி கூறியதாவது: இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் பாதிக்கப்பட்டு விட்டதாக அண்மைக் காலமாக ஒருதகவல் பரவி வருகிறது. அதில் உண்மையில்லை. அந்தக் கருத்தை வெளியிடுவோரை எனக்கு அடையாளம் காட்டினால் அவர்களின்நோக்கம் என்ன என்பதை என்னால் தெரிவிக்க இயலும். குடிமக்களிடையே தேசப்பற்றை வளர்ப்பதே நமக்குள்ள முக்கிய கவலை. அனைத்துத் துறைகளிலும்  தேசப் பற்றை வளர்க்க வேண்டும். நாடு தந்திரம் அடைவதற்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கருத்து சுதந்திரத்துக்கு கட்டுப்பாடுகள் இருந்தன. அதை எதிர்த்து நாங்கள் போராடினோம்.

சுதந்திரம் அடைந்தபிறகு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட போது,  கருத்து சுதந்திரத்துக்கு தடை இருந்தது. அதை எதிர்த்து மீண்டும் நாங்கள் போராடினோம். ஆனால், தற்போது அத்தகைய நிலை இல்லை என்றார் அத்வானி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...