பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்த 2014ம் ஆண்டு பதவி ஏற்று 7 ஆண்டுகள் நிறைவுசெய்ததையடுத்து, நாடுமுழுவதும் ஒருலட்சம் கிராமங்களில் கரோனா விழிப்புணர்வு, தடுப்பு நடவடிக்கைகளிலும், நிவாரண நடவடிக்கைகளிலும் பாஜக தலைவர்கள் ஈடுபட முடிவுசெய்துள்ளனர்.
இதுகுறித்து பாஜக மூத்த தலைவரும் எம்.பியுமான அனில் பலூனி கூறுகையில் “ நாட்டில் கரோனா வைரஸ்பரவல் இருப்பதால், மோடி அரசின் 7-வது ஆண்டு விழாவை பாஜக கொண்டாடவில்லை. அதற்குப்பதிலாக மத்திய அமைச்சர்கள் முதல் கிாாமங்களில் பூத்ளவில் இருக்கும் நிர்வாகிகள்வரை கரோனா விழிப்புணர்வு, நிவாரண நடவடிக்கையில் ஈடுபடஉள்ளனர்.
இதன்படி நாடு முழுவதும் ஒருலட்சம் கிராமங்களில் மத்திய அமைச்சர்கள் முதல் பூத் நிர்வாகிகள் வரை கரோனா தடுப்பு நடவடிக்கைகள், விழிப்புணர்வு நடவடிக்கை, நிவாரணப் பணிகளில் ஈடுபடுவார்கள். பிரதமர் மோடி தலைமையிலான் 7-வது ஆண்டுவிழாவை சேவை நாள் என்று கொண்டாட உள்ளோம். இந்த நாளில் பாஜக தொண்டர்கள், நிர்வாகிள், அனைவரும் மக்களுக்கு கரோனாநிவாரண உதவிகளை வழங்கிடவேண்டும்.
பாஜக தேசியத் தலைவர் ஜேபி. நட்டா தலைமையில் கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகள், மூத்த உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள் எனப் பலரும் ஞாயிற்றுக் கிழமையன்று பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள கிராமங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வார்கள். குறைந்தபட்சம் பாஜக தலைவர்கள் இரு கிராமங்களில் நிவாரணப் பணிகளையும், கரோனா தடுப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடுவார்கள்.
பிரதமர் அரசின் 7-வது ஆண்டு விழாவை முன்னிட்டு இதுவரை மக்களுக்கு 30 லட்சம் குடும்பங்களுக்கு உணவு பொட்டலங்களை பாஜக தொண்டர்கள் விநியோகம் செய்துள்ளனர்,18 லட்சம் குடும்பங்களுக்கு ரேஷன்பொருட்களை இலவசமாக வழங்கியுள்ளனர்.
கரோனா வைரஸ்தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஏராளமான பாஜக தொண்டர்கள் ஈடுபட்டுவருகின்றனர், பாஜக சார்பில் 4 ஆயிரம் உதவிமையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு பலூனி தெரிவித்தார்.
எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ... |
நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ... |
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |