மூன்று நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ள அபுதாபியின் பட்டத்து இளவரசர் அல் நஹ் யானுக்கு குடியரசு தலைவர் மாளிகையில் முறையான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அல்நஹ்யான் இந்தியா வருவது இதுவே முதல்முறை. அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், நிதியமைச்சர் அருண்ஜேட்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை தலை வருமான அல் நஹ்யான், பிரதமரை அவரது அலுவலகத்தில் நேற்று சந்தித்துப்பேசினார்.
இது தொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப், “விதி விலக்கான இருவருக்கு மட்டும் இடையிலான சந்திப்பில் பிரதமர் மோடி, பட்டத்து இளவரசர் அல் நஹ்யானை சந்தித்தார்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இரு தரப்பிலும் ஏராளமான ஒப்பந்தங்கள் கையொப்பமாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.
அடிப்படை வாதத்தை தடுக்கும் வழி முறை, தீவிரவாதத்துக்கு எதிரான போரில் ஒத்துழைப்பு, ஐஎஸ் பிரச்சினை உள்ளிட்டவை பேச்சு வார்த்தையில் முக்கிய அங்கம்வகிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
முறைப் படியான வரவேற்புக்கு முன்னதாக, அல் நஹ்யான் ராஜ் காட்டிலுள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்குச் சென்று மலர்மரியாதை செலுத்தினார்.
பட்டத்து இளவரசர் அல்நஹ்யான் வருகையின் போது அவரை பிரதமர் நேரில்சென்று வரவேற்பது மரபல்ல என்ற போதும், சிறப்புநண்பராக, விமான நிலையம் சென்று மோடி வரவேற்றது இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையேயான உறவில் புதிய உறுதி, நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ... |
டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.