வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு ரூ.1,773 கோடி நிதி மத்திய அரசு அறிவிப்பு

வெள்ளம் மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழகம், அசாம் உள்பட 7 மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ.4,100 கோடியை ஒதுக்கீடுசெய்துள்ளது. இதில் தமிழகத்துக்கு ரூ.1,773 கோடி நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்தாண்டு இறுதியில் கன மழை பெய்து கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. இதனால், மாநிலத்துக்கு  நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசிடம் கோரிக்கை விடுத் திருந்தார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் கடிதம் எழுதினார். இதேபோல், அசாமிலும் வெள்ளத்தால் கடும்பாதிப்பு ஏற்பட்டது. சுமார் 10 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, அம்மாநிலமும் மத்திய அரசிடம் நிதிகேட்டது.

இதற்கிடையே, ஆந்திரா, ஜார்கண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்கள் முன்னெப்போதும் இல்லா வகையில் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டன. இதனால் அம்மாநில விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு பலர் தற்கொலை செய்துகொண்டனர். இம்மாநிலங்களுக்கும் விவசாய பாதிப்புக்கு இழப்பீடு வழங்கவும், நிவாரண பணிகளுக்காகவும் மத்திய அரசிடம் நிதிகேட்டிருந்தன.

இந்நிலையில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற உயர்நிலைக் குழு கூட்டத்தில்,  வெள்ளம் மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்ட 7 மாநிலங்களுக்கு, தேசிய ேபரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.4,087.27 கோடி ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. இதில் தமிழகத்திற்கு ரூ.1,773.78 கோடியும், ஜார்க்கண்டுக்கு ரூ.336.94, ராஜஸ் தானுக்கு ரூ.1,177.59 கோடி, ஆந்திராவுக்கு ரூ.280.10 கோடி, அசாமுக்கு ரூ.332.57 கோடி, இமாச்சல் பிரதேச த்திற்கு ரூ.170.19 கோடி, நாகாலாந்திற்கு ரூ.16.02 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...