உலகளாவிய வர்த்த எளிமை யாக்கல் ஒப்பந்தத்தை அமல்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

உலகளாவிய வர்த்த எளிமை யாக்கல் ஒப்பந்தத்தை இந்தியாவில் அமல்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை புதன் கிழமை ஒப்புதல் அளித்தது.

 உலக வர்த்தக அமைப்பு (டபிள்யூ.டி.ஓ) சார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சர்வதேச மாநாட்டில், உலகளாவிய வர்த்தக நடை முறைகளை எளிமைப்படுத்துவது தொடர்பான ஒப்பந்தத்தை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

 பல்வேறு நாடுகளிடையேயான சரக்கு போக்கு வரத்து நடவடிக்கைகளை எளிமைப்படுத்துவதற்கு இந்த ஒப்பந்தத்தில் வகை செய்யப் பட்டுள்ளது.

 இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தில்லியில் புதன் கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப் பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

 அவற்றில் வர்த்தக எளிமையாக்கல் ஒப்பந்தத்துக்கு அனுமதி அளித்ததும் ஒன்றாகும். அந்த ஒப்பந்தம் அமல்படுத்தப் படுவதைக் கண்காணிக்க மத்திய வருவாய் மற்றும் வர்த்தக துறைச்செயலர்கள் அடங்கிய தேசியக் குழுவை அமைக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.

 இதை மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 ஆயுஷ் அமைச்சக ஒப்பந்தம்: இந்தியப் பாரம்பரிய மருத்துவசிகிச்சை முறைகளை சர்வதேச அளவில் கொண்டுசேர்க்கும் நோக்கில் மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் மற்றும் உலகசுகாதார அமைப்பு (டபிள்யூ.எச்.ஓ) இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளான ஆயுர் வேதம், சித்தா, யோகா, யுனானி ஆகியவை குறித்து சர்வதேச அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

 அதுதொடர்பான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள், பயிலரங்கங்கள், கருத்தரங்குகள் உள்ளிட்டவை ஆயுஷ் அமைச்சகம் மற்றும் உலகசுகாதார அமைப்பு சார்பில் நடத்தப்படும்.

 மத்திய கொள்கை குழுவின் (நீதி ஆயோக்) தலைவர், தொலைத்தொடர்பு ஆணையத்தின் பகுதிநேர உறுப்பினராக செயல்படுவதற்கு மத்திய அமைச்சரவை இசைவு தெரிவித்துள்ளது. திட்டக்குழு அமலில் இருந்தபோது, அதன்செயலர் தொலைத்தொடர்பு ஆணையத்தின் பகுதிநேர உறுப்பினராகப் பொறுப்பு வகிக்கும் நடைமுறை இருந்தது. திட்டக்குழுவுக்கு மாற்றாக தற்போது கொள்கை குழு நடைமுறையில் இருப்பதால் மத்திய அமைச்சரவை இந்த ஒப்புதலை அளித்துள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...