எட்டு மாநில இடைத்தேர்தல் வெற்றி நிதானமான மோடி அலையையே காட்டுகிறது

சமீபத்தில் எட்டு மாநிலங்களில், 12 சட்டசபை தொகுதிகளுக்கு, நடந்த இடைத்தேர்தலில் பாஜகவும், அதன் கூட்டணி கட்சிகளும் 7 தொகுதிகளில் வென்று காங்கிரஸ், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட ஆளும் கட்சிகளை பின்னுக்கு தள்ளியுள்ளது.

மகாராஷ்டிரம்: மும்பை புறநகர் பகுதியில் உள்ள பல்ஹர் பேரவைத் தொகுதிக்கு  நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணிக் கட்சியான சிவசேனை தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை விட 18,948 வாக்குகள் அதிகம் பெற்று வென்றுள்ளது .


மத்தியப் பிரதேசம்: சத்னா மாவட்டத்தில் உள்ள மைஹர்  தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் மணீஷ் படேலைவிட அதிக வாக்குகள் பெற்று பாஜக வேட்பாளர் நாராயண் திரிபாதி வெற்றி பெற்றார்.


 உத்தரப் பிரதேசம்: முசாஃபர்நகர் தொகுதியில் பாஜகவும், சஹரன்பூர் மாவட்டம், தேவ்பந்த் தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றன. ஃபைஸாபாத் மாவட்டம், பிகாபூர் தொகுதியில் ஆளும் சமாஜவாதி கட்சி வேட்பாளர் ஆனந்த் சேன்  யாதவ் வெற்றி பெற்றார்.


 பிகார்: மதுபனி மாவட்டம், ஹர்லகி பேரவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி வெற்றி பெற்றது.

 

பஞ்சாப்: கதூர் சாஹிப் தொகுதியில் பாஜக கூட்டணி கட்சியான ஆளும் சிரோமணி அகாலி தளம் வெற்றி பெற்றது.

 

கர்நாடகாவில்  ஹெப்பால் தொகுதியில் பாஜக வேட்பாளர் நாராயணசாமி 19 ஆயிரத்து 149 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதேபோல தேவதுர்கா தொகுதியில் பாஜக வேட்பாளர் சிவன கவுடா நாயக் 16 ஆயிரத்து 871 வாக்குகள் வித்தியாசத்தில் வாகை சூடினார்.  பீதர் தொகுதியில் காங்கிரஸ் வென்றுள்ளது.

 தெலங்கானா மாநிலம், நாராயண்கெட் தொகுதி இடைத்தேர்தலில் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியும், திரிபுரா மாநிலம், பீர்கஞ்ச் தொகுதி இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வெற்றி பெற்றன.

உ.பி.,யை பொறுத்த வரை  முஷாபர் நகர் தொகுதி கடந்த 2013ம் ஆண்டு மதக் கலவரத்தை அடுத்து நடைபெறும் முதல் தேர்தல், சமாஜ்வாதி வேட்பாளர் கவுர் தனது தந்தையின் மறைவை அனுதாப வாக்காக முயன்றார். மேற்கு பகுதியில் பலம் பொருந்திய சமாஜ்வாதி அமைச்சர் ஆசாம் கான் 30 சதவிதத்துக்கும் அதிகமான இஸ்லாமிய வாக்குகளை சிந்தாமல் கட்டுக்கொப்பாக ஒருங்கிணைத்தார்.  பணத்தை தண்ணீர் போல இறைத்தார் இத்தனையையும் தாண்டி இந்த தொகுதியில் பாஜக.,வின் வெற்றி 2017ம் ஆண்டு வரவிருக்கும் உ.பி.,சட்ட சபை தேர்தலுக்கான மைல்கல்லாகவே பார்க்கப் படுகிறது.

“நாட்டின் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, மத்திய பகுதிகளில் நடந்த இடைத்தேர்தல்களில் பாரதீய ஜனதாவும், அதன் கூட்டணி கட்சிகளும் பெற்ற வெற்றி, மகிழ்ச்சி அளிக்கிறது”

பிரதமர் நரேந்திர மோடி

“எதிர்க்கட்சிகளின் மத்திய அரசுக்கு எதிரான, அடிப்படை ஆதாரமற்ற குற்றச் சாட்டுகளை மக்கள் நிராகரித்துள்ளனர் என்பதையே இது காட்டுகிறது”;-.

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா
 

“முசபார் நகர் இடைத்தேர்தலில் பாஜக.,வின் வெற்றி முதல்வர் அகிலேஷ் யாதவின் தோல்வியாகும்”:-

பாஜக தேசிய செய்திதொடர்பாளர்  சந்திர மோகன்

 

பீஹாரிலும், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற 3 மாதத்தில் முதல்வர் நிதிஷ் குமாரின் மகா கூட்டணியை பின்னுக்கு தள்ளி, பா.ஜ., வென்றுள்ளது.. லாலு, நிதீஷ், சோனியா கூட்டாக சேர்ந்ததால் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்கள். அப்படி கூட்டு சேர்ந்ததன் விளைவை மக்கள் உடனடியாக உணர தொடங்கிவிட்டதால்   மற்ற கட்சிகளையும்  மீறி பா.ஜ. வென்றுள்ளது..

கர்நாடகாவில் காங்கிரசியின் கோட்டையான ஹெப்பால் தொகுதியிலும், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் அதிகம் நிரம்பிய  தேவதுர்கா தொகுதியிலும் பாஜக வென்றதன் மூலம் கர்நாடகாவிலும் இழந்த செல்வாக்கை மீட்டுள்ளது.

இங்கே ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்து கொண்ட தலித் மாணவரை ஓட்டுக்காக காணச் சென்ற ராகுலின் செயலை, ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் அப்சல் குருவுக்கு ஆதரவான தேச விரோதிகளின் கூட்டத்தின் உரிமை குரல்களை காக்க சென்ற ராகுலின் செயலை மக்கள் ஆதரிக்க வில்லை

மாறாக மோடி அலை ஓயவில்லை நிதானமாக வீசிக்கொண்டுதான் இருக்கிறது, மத்திய அரசின் தொலைநோக்கு பார்வைக்கொண்ட வளர்ச்சி திட்டங்கள் ஏற்கத்தக்கதே, பாராளுமன்றத்தில் வளர்ச்சி திட்டங்களுக்கு எதிர்க்கட்சிகள் போடும் முட்டுக்கட்டைகள் தேவையற்றது என்கிற ரீதியில் மக்கள் வாக்களித்துள்ளனர் என்று கூறலாம்.

நன்றி; தமிழ்த் தாமரை VM வெங்கடேஷ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...