நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதிமேம்பாட்டு நிதியை கொண்டு உறுப்பினர்கள் அனைவரும் தங்களது தொகுதிகளில் நடமாடும் சுகாதார மையங்களை தொடங்கவேண்டும் என மக்களவை தலைவர் சுமித்ரா மகாஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.
புது தில்லியில், சபிலான்ஞ்சி கிராமத்தில் மக்களவைத் பாஜக உறுப்பினர் மீனாட்சி லேகியின் முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ள இரு நடமாடும் சுகாதாரமைய வாகனங்களை ஞாயிற்றுக் கிழமை தொடங்கிவைத்துப் பேசுகையில் அவர் இதைத்தெரிவித்தார்.
புதுதில்லி மக்களவை தொகுதி பாஜக உறுப்பினரும், புது தில்லி முனிசிபல் கவுன்சில் உறுப்பினருமான மீனாட்சிலேகி பேசுகையில், "கர்ப்பிணிகளும், முதியோர்களும் பலநேரங்களில் மருத்துவமனைக்கு செல்ல இயலா சூழல் உள்ளது. ஏழை, எளியமக்களுக்கு அவர்களது வீட்டு வாசலிலேயே தரமான மருத்துவத்தைக் கொண்டுசேர்க்கும் பணியை இந்த நடமாடும் சுகாதார மையங்கள் மேற்கொள்ளும்.
இவற்றில் ஆதார் எண், ஸ்மார்ட் கார்டு உதவியுடன் நோயாளிகளின் அனைத்து தகவல்களும் பதியும்வசதி செய்யப்பட்டுள்ளது. காசநோயாளிகளுக்கு எக்ஸ்-ரே வசதியும் இதில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நடமாடும் சுகாதார மையங்களில் தலா ஒருமருத்துவரும் இரு துணை மருத்துவப் பணியாளர்களும் பணியில் இருப்பர். பொலிவுறு நகர (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தின் ஒருபகுதியாக இந்த நடமாடும் சுகாதார மையம் தொடங்கப்பட்டுள்ளது.
தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ... |
Leave a Reply
You must be logged in to post a comment.