இந்தியாவின் எதிர்காலம் சார்ந்த முக்கியமான 4 செய்திகளை கடந்த வாரத்தில் ஊடகங்கள் மக்களிடத்தில் கொண்டு சேர்க்க தவறியுள்ளன. மாறாக தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் மற்றும் தேவையற்ற அரசியல் போராட்டங்கள், தற்கொலை தொடர்பான செய்திகள் தான் ஊடகங்களில் முக்கிய இடத்தை பிடித்துக் கொண்டன. இதனால் ஜனநாயகத்தின் 4வது தூணான இந்திய ஊடகங்களும், செய்திதாள்களும் தங்களின் சமூக பொறுப்புக்களை மறந்து செயல்பட்டு வருகின்றனவோ என ஐயம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.
1. பிரதமர் மோடியின் கனவு திட்டமான தூய்மை இந்தியா திட்டத்திற்கு உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது. இதற்கு ஆதரவு தரும் வகையில் இத்திட்டத்திற்காக 1.5 பில்லியன் டாலர்கள் நிதி வழங்கவும் உலக வங்கி ஒப்புதல் தெரிவித்துள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2014ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி தொடங்கி வைத்தார். தூய்மை இந்தியா என்ற நோக்கத்தை அடைவதற்கான இலக்கு 2019ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்குள் சுத்தத்தை உறுதி செய்வது மற்றும் 4,041 நகர்ப்புறங்களில் திறந்தவெளியில் மலம் கழிக்கும் அவலம் இல்லாத நிலையை உறுதி செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை கொண்டாட இருக்கும் தருணத்தில் தூய்மையான இந்தியா அவருக்கு அஞ்சலி செலுத்துவதாக அமையும் என்று சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் நாள் தூய்மை இந்தியா இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தபோது தெரிவித்தார். இதற்கான திட்டச் செலவு ரூ.66,009 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு, அதில் மத்திய அரசின் பங்காக ரூ.14,643 கோடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக வங்கி அளித்துள்ள புள்ளிவிவர தகவலின் படி உலக அளவில் 240 கோடி மக்கள் சுகாதார வசதி இல்லாமல் உள்ளனர். அதில் இந்தியாவில் மட்டும் சுமார் 75 கோடி பேர் சுகாதார வசதி இல்லாத நிலையில் வாழ்கின்றனர். குறிப்பாக அதிலும் 80 சதவீத மக்கள் இந்திய கிராமங்களில் வசிக்கின்றனர். இந்தியாவில் 50 கோடிக்கும் அதிகமானோர் திறந்தவெளியில் மலம் கழிக்கின்றனர்.
இந்நிலையில், தூய்மை இந்தியா திட்டத்திற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதற்கு உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிதியானது மத்திய குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகத்தால் தூய்மை இந்தியா திட்டத்திற்காக நிர்வகிக்கப்படும் என்றும் உலக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. சூரிய ஒளிசக்தி ஆய்வை ஊக்குவிக்கும் வகையில் இந்தியா-ஜப்பான் இடையே ஏற்பட்டுள்ள அணுசக்தி கொள்கைக்கு மாற்று சக்திகண்டுபிடிப்பு அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சூரிய ஒளிசக்தியை பயன்படுத்துவதில் இந்தியா மிகப் பெரிய மைல்கல்லை எட்டிப்பிடிக்கும் எனவும், ஒட்டுமொத்த உலகிற்கும் இந்தியா வழிகாட்டியாகவும், முன்னோடியாகவும் திகழும் எனவும் புகழ்ந்துள்ளது. ஜப்பான், உலக அளவில் அணு ஆயுதப் பரவலுக்கு எதிராக தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவுடன் ஆக்கப்பூர்வ அணுசக்தித் துறையில் ஜப்பான் ஒத்துழைக்க முன்வந்திருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதேபோல, உலக அளவில் அணுசக்தித் துறையில் ஜப்பான் முக்கியப் பங்காற்றி வருகிறது. தற்போது ஜப்பானுடன் இந்தியா ஆக்கப்பூர்வ அணுசக்தி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதால், அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி அணுசக்தி நிறுவனங்களான வெஸ்டிங் ஹவுஸ் எலெக்ட்ரிக் கார்ப்பரேஷன், ஜி.இ. எனர்ஜி நிறுவனம் ஆகியவை இந்தியாவில் எளிதில் அணுசக்தி நிலையங்களை உருவாக்க வழிவகை ஏற்பட்டுள்ளது. இந்த 2 நிறுவனங்களும் ஜப்பானின் முதலீட்டுடன் செயல்பட்டு வருபவை என்பது குறிப்பிடத்தக்கது.
3. அடுத்த ஓராண்டில் கூகுள் நிறுவனம் 100 ரயில்நிலையங்களில் இலவச வை-பை சேவை வழங்க உள்ளது. இதன் மூலம் 20 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற உள்ளனர். வளரும் நாடுகள் UNFCCCயில் சமர்ப்பித்த அறிக்கயின் படி, இந்திய ரயில்வே துறை கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பொது வை-பை திட்டத்தை அறிவித்தது.இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலிபோர்னியா, மவுண்டென் வியூவில் அமைந்துள்ள கூகுள் தலைமை அலுவகத்திற்கு சென்றிருந்த போது, முதற்கட்டமாக இந்தியாவில் உள்ள 100 முக்கிய ரயில்நிலையங்களில் இலவச வை-பை திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், பின்னர் படிப்படியாக இது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள 400 ரயில் நிலையங்களில் விரிவாக்கம் செய்யப்படும் எனவும் அறிவித்திருந்தார். அதன்படி கூகுள் இந்தியா மற்றும் இந்திய ரயில்வேயின் தொலைத்தொடர்ப்புக்கரமான ரயில்டெல்லுடன் இணைந்து மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இலவச பொது வை-பை சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் மும்பை சென்ட்ரல் இந்தியாவின் அதிவேக வை-பை இன்டர்நெட் வசதியை பெற்றுள்ள முதல் ரயில்நிலையம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
4. சிபிஎஸ்இ பாடப்புத்தகங்கள் இலவசமாக ஆன்லைனில் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். மாணவ, மாணவிகளுக்கு உயர்தரமான கல்வி கிடைத்திடும் வகையில் மத்திய மாதிரி பள்ளி (ராஷ்ட்ரிய ஆதர்ஷ் வித்யாலயா) என்ற திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த மத்திய அரசு முடிவுசெய்திருக்கிறது. அரசு – தனியார் கூட்டுமுயற்சியுடன் இது நிறைவேற்றப்படவுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் வட்டாரத்துக்கு ஒரு பள்ளி வீதம் 2,500 சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்கப்படும்.ம்
இதற்காக தனியார் புதிய பள்ளிகளை தொடங்கலாம். அல்லது தற்போதைய பள்ளிகளையே மாதிரி பள்ளிகளாக மாற்றிக்கொள்ளலாம். பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிக்காக மொத்த செலவில் 25 சதவீத தொகையை மத்திய அரசு மானியமாக ஆண்டுதோறும் வழங்கும். மேலும், சிபிஎஸ்இ பாடத் திட்ட புத்தகங்களையும் ஆன்லைனில் இலவசமாக வழங்கப் போகிறோம். மேலும் ஆடியோ, வீடியோ வடிவிலான போதனா முறைகளையும் இலவசமாக வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
நன்றி தினமணி
அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது. |
ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ... |
தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.