அரசியலில் தலையி டுவதை விடுத்து, கல்வியில் கவனம்செலுத்த வேண்டும் என்று தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழக (ஜேஎன்யு) மாணவர் அமைப்பு தலைவர் கன்னையா குமாருக்கு மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான வெங்கய்ய நாயுடு அறிவுரை வழங்கியுள்ளார்.
தேசவிரோத வழக்கில் இடைக்கால ஜாமீனில் வெளிவந்ததும் பிரதமர் நரேந்திர மோடியை கன்னையா குமார் விமர்சித்து பேசியுள்ள நிலையில், வெங்கய்ய நாயுடு இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து சுட்டுரையில் அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவுகள் வருமாறு:
கன்னையா குமார் வியாழக்கிழமை பேசியபேச்சுக்களுக்கு, எதிர்க்கட்சித் தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதன் மூலம் கன்னையா குமாருக்கு இலவசமாக விளம்பரம் கிடைக்கிறது; அதை அவரும் அனுபவித்து வருகிறார். பல்கலைக்கழகங்கள், கல்விக்கான இடங்களாகும். அங்கு அரசியலில் ஈடுபடக்கூடாது. கல்வியிலேயே கவனம் செலுத்த வேண்டும்.
அரசியலில் மாணவர்களுக்கு விருப்பம் இருக்கும் பட்சத்தில், படிப்பை உதறிவிட்டு, அரசியலில் குதிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் ஓரிடம்கூட பெறாத தனக்கு விருப்பமான அரசியல் கட்சியில் கன்னையாகுமார் சேரலாம் என்று சுட்டுரை பதிவுகளில் வெங்கய்ய நாயுடு குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தேச விரோத கோஷங்கள் எழுப்பப்பட்டது குறித்து தில்லி போலீஸார் நடத்தி வரும் விசாரணையில் தம்மால் எதுவும் செய்ய முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ... |
இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ... |
உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.