நேர்மையாக வரிசெலுத்தும் மக்களை துன்புறுத்தாதிர்

நேர்மையாக வரிசெலுத்தும் மக்களை துன்புறுத்தக்கூடாது என்று இந்திய வருவாய்ப்பணி (ஐஆர்எஸ்) அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கினார்.

மத்திய அரசுசார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொதுமக்களுக்கு உகந்த முன்முயற்சித் திட்டங்கள், அனைவரையும் சென்றடைந் துள்ளதா? என்பதை உறுதிப்படுத்துமாறும் அவர்களிடம் மோடி அறிவுறுத்தினார்.

இந்திய வருவாய்ப்பணியில் இணைந்துள்ள 167 இளம் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி வியாழக்கிழமை கலந்துரையாடினார். அப்போது, தனதுவாழ்வில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளையும், அனுபவங்களையும் அதிகாரிகளுடன் அவர் பகிர்ந்துகொண்டார்.

மக்களுடன் நட்புறவோடு இணைந்து பணியாற்றுவதன் முக்கியத்துவம் குறித்து மோடி விளக்கினார். நாட்டுமக்கள் ஒவ்வொருவரையும், தனது குடும்பத்தில் ஒருவராக அதிகாரிகள் பாவிக்கவேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப் பட்டிருந்ததாவது:

கலந்துரை யாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிகாரிகள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பிரதமர் பதிலளித்தார். பெரும்பான்மையான இந்தியர்கள் சட்டத்தின்வழி நடப்பவர்கள் என்று தெரிவித்த பிரதமர், நேர்மையாக வரிசெலுத்தும் எவரையும் அதிகாரிகள் துன்புறுத்த கூடாது என்று அறிவுறுத்தினார். மக்களின்மீது அதிகாரிகள் நம்பிக்கை வைக்கவேண்டும் என்றும் துடிப்புடனும், உத்வேகத்துடனும் பணியாற்றினால் சோர்வு என்ற பேச்சுக்கே இடமிருக்காது என்றும் மோடி அறிவுரைவழங்கினார் என்றும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ...

எலும்பு நைவு (OSTEOPOROSIS)

உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ...

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...