ஏழை பெண்களுக்கு இலவசகாஸ் இணைப்பு வழங்கு வதற்காக பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்துக்காக ரூ.8,000 கோடியை ஒதுக்கீடுசெய்து மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இது குறித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது: பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் ஏழைபெண்களுக்கு இலவச காஸ் இணைப்பு வழங்குவதற்கான பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனாவுக்கு நிதி ஒதுக்கீடுசெய்வது பற்றி ஆலோசிக்கப்பட்டது. இதில் இந்ததிட்டத்தை செயல்படுத்து வதற்காக மூன்று ஆண்டுகளுக்கு ரூ. 8,000 கோடி ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கு அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது.
வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தை சேர்ந்தபெண்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் இலவச காஸ் இணைப்பு வழங்கப்படும் என்றார். நிதிய மைச்சர் அருண்ஜெட்லி 2016-17ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல்செய்தபோது, ‘ஏழை குடும்பத்திலுள்ள பெண்களுக்கு இலவசகாஸ் இணைப்பு வழங்குவதை அரசு நோக்கமாக கொண்டுள்ளது. இதற்காக நடப்புஆண்டுக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. இதன் மூலம் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 1.5 கோடி குடும்பங்கள் பயன் பெறுவார்கள். இதற்கான திட்டம் குறைந்தது 2 ஆண்டுக்குமேல் செயல்படுத்தப்படும். இதனால் 5 கோடி குடும்பங்கள் பயன் பெறும்’’ என தெரிவித்திருந்தார்.
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |
ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ... |
Leave a Reply
You must be logged in to post a comment.