தெருவோர உணவு விற்பனையாளர்களுக்கு பயிற்சிய

சுகாதாரத்தை பேணும் வகையில் தெருவோர உணவு விற்பனையாளர்களுக்கு பயிற்சியளிக்கும் திட்டத்தை டெல்லியில் மத்தியஅரசு தொடங்கியுள்ளது. இந்திய உணவுபாதுகாப்பு மற்றும் தர நிறுவனம் (எப்எஸ்எஸ்ஏஐ) சார்பில் “சுத்தமான தெரு உணவு” என்ற தலைப்பில் புதியதிட்டத்தை டெல்லியில் மத்திய அரசு தொடங்கி வைத்தது.

சாலையோர வியாபாரிகள்  விற்பனைசெய்யும் உணவு தரமானதாகவும் சுகாதாரமானதாகவும் இருக்கும் வகையிலான இந்ததிட்டத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜேபி நட்டா நேற்று முன்தினம் தலைநகரில் தொடங்கிவைத்தார். இதன் மூலம் தெருவோர வியாபாரிகளுக்கு 7 பயிற்சி நிறுவனங்கள் உதவியுடன் 40 மையங்களில் பயிற்சி அளிக்கப் படுகிறது. சாலையோரங்களில் உணவு விற்பனைசெய்யும் வியாபாரிகள் அடுத்த 4 வாரங்கள் இந்தபயிற்சியை பெற உள்ளனர். இந்தபயிற்சிக்கான உதவியை சுற்றுலாத்துறை மற்றும் மருத்துவத்துறை ஸ்கில் கவுன்சில் செய்துள்ளது.

இது தவிர உணவுபாதுகாப்பு தொடர்பாக பொதுமக்கள் ஆலோசனை வழங்குவதற்கான மொபைல் ஆப்சும் விழாவில் தொடங்கி வைக்கப்பட்டது. திட்டத்தை தொடங்கிவைத்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டா பேசியதாவது:  நாடுமுழுவதும் 20 லட்சம் தெருவோர வியாபாரிகள் உள்ளனர். தள்ளுவண்டி உணவு விடுதிகள் நம்வாழ்வில் ஒரு அம்சமாகி விட்டது. தற்போது டெல்லி தலைநகர் மண்டலத்தில் சோதனை அடிப்படையில் 20 ஆயிரம் வியாபாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன்மூலம் தெருவோர உணவின் தரம் உயர்த்தப்படும். இதன் மூலம் வாடிக்கை யாளர்களின் உடல் நலம் பாதுகாக்கப்படும். இந்ததிட்டம் மூலம் அமைப்பு சாரா நிறுவனம் ஒன்று முறையான செய்முறை பயிற்சி பெறுவது உறுதி. இவ்வாறு அவர் பேசினார். இந்த பயிற்சி முடிவில் தெருவோர உணவு வியாபாரிகளுக்கு பதிவு அட்டை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...