தமிழக சட்ட சபை தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்களின் முதல்பட்டியல் இன்று வெளியிடப்படும் என்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.
மத்திய மந்திரியும், பாஜக தமிழக தேர்தல் பொறுப் பாளருமான பிரகாஷ் ஜவடேகர் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது:–
தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும். இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட சிலகட்சிகள் எங்களுடன் இணைந்து போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளன. அந்தகட்சிகளுடன் சேர்ந்து நாங்கள் தேர்தலை சந்திப்போம்.
மக்கள் பிரதமரையும், பாஜக.,வையும் நேசிக்கிறார்கள். திராவிடகட்சிகள் தமிழகத்துக்கு கடந்த 50 ஆண்டுகளாக செய்ததைவிட மேலும் சிறந்தவகையில் பாரதீய ஜனதா மக்களுக்கு தொண்டாற்றும். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், செயல்பாட்டில் நம்பிக்கைகொண்ட தமிழக மக்கள் கண்டிப்பாக பாரதீய ஜனதாவை இந்ததேர்தலில் பெருவாரியாக ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்குண்டு.
எங்கள் கட்சியின் தமிழக சட்டசபை தேர்தல்குழு கூட்டம் சென்னையில் வியாழக்கிழமை (நேற்று) நடைபெறுகிறது. இந்தகுழு வேட்பாளர்களை முடிவுசெய்யும். பின்னர் இந்தகுழுவினர் டெல்லிவந்து எங்களை வெள்ளிக்கிழமை (இன்று) சந்திப்பார்கள். அன்று பாரதீய ஜனதா வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியிடப்படும் இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.