எனது போராட்டம் கோகாய்க்கு எதிரானதல்ல, அசாமில் நிலவும் வறுமை, ஊழலுக்கு எதிரானது


இந்தியா சுதந்திரம் அடைந்தபோது வளமிக்க 5 மாநிலங்களில் ஒன்றாக அசாம் இருந்தது. ஆனால் 60 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சிக் குப்பின், தற்போது நாட்டின் 5 ஏழை மாநிலங்களில் ஒன்றாக மாறிஉள்ளது. வளர்ச்சியின்மை, வேலையில்லா திண்டாட்டம், மின்சாரம் மற்றும் குடி நீர் வசதியின்மை போன்றவை அசாமை இந்த நிலைக்கு கொண்டுவந்துள்ளன.

என்னிடம் 3 திட்டங்கள் உள்ளன. அவை வளர்ச்சி, வேகமானவளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சி என்பதாகும். அந்த அடிப்படையில் அசாம் மாநில வளர்ச்சிக்கு முந்தைய அரசுகளைவிட எங்கள் அரசு அதிகப்படியான நிதியை ஒதுக்கியுள்ளது.

இங்குள்ள ஏழைகளுக்கு வீடுகள் கட்டுவதற்கு, அசாமின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு என டெல்லியில் இருந்து அதிக நிதி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் அந்தநிதி செலவழிக்கப் படாமல் வங்கியிலேயே முடங்கி கிடக்கிறது. இதுதொடர்ந்தால் அசாமில் எவ்வித வளர்ச்சியும் ஏற்படாது.

5 கோடி ஏழைகளின் புகை அடுப்புகளுக்கு பதிலாக எரிவாயு அடுப்புவழங்க நாங்கள் முடிவு செய்தோம். அதற்காக அசாமுக்கு சமையல் எரிவாயு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் இங்குள்ள ஏழைகளின் வீடுகளுக்கு எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டு உள்ளதா?

அசாமின் 2000 கிராமங்களில் 1000-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு எங்கள் அரசு மின்இணைப்பு வழங்கியது. ஆனால் இந்தகிராமங்களுக்கு இன்னும் மின்சாரம் சென்று சேரவில்லை.

60 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியின் இதுபோன்ற முறைகேடுகளை களைய வெறும் 5 ஆண்டுகளை எங்களுக்கு தாருங்கள். முதல்மந்திரியாக சர்பானந்தாவுக்கு 5 ஆண்டுகளை வழங்குங்கள். அசாம் வளர்ச்சிக்கான புதியசகாப்தத்தை நாங்கள் உருவாக்குவோம். பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணிகட்சிகள் இணைந்து, அசாமை அதன் கடினமான சூழலில் இருந்து மீட்டெடுப்பர்.

பா.ஜ.க முதல்-மந்திரி வேட்பாளரான சோனோவால் மத்தியமந்திரி சபையில் இடம் பெற்றுள்ள சிறந்த மந்திரிகளில் ஒருவர். அந்த வகையில் திறமையான, எளிமையான அவர் முதல்-மந்திரியானால் அது எனது அரசுக்கும், எனக்கும் தனிப்பட்ட இழப்பு.

அசாமில் ஒரேஒரு ‘ஆனந்த்’ (மகிழ்ச்சி) தான் உள்ளது. அது சார்பானந்தாதான்.

அசாம் தேர்தல் தனக்கும், மோடிக்கும் இடையேயான நேரடிபோட்டி என, சில ஆண்டுகளில் 90 வயதை எட்டப்போகும் காங்கிரஸ் தலைவர் (தருண் கோகாய்) கூறியுள்ளார். மதிப்புக் குரிய முதல்-அமைச்சரே, நீங்கள் மூத்தவர், நானோ இளையவன். உங்களுக்கு நான் மரியாதையே செலுத்துகிறேன். நமதுகலாசாரத்தில் மூத்தவர்களுடன், இளையவர்கள் போட்டி போடக் கூடாது. அதைப்போல இளையவர்களுக்கு மூத்தவர்கள் ஆசி வழங்கவேண்டும்.

எனது போராட்டம் தருண் கோகாய்க்கு எதிரானதல்ல. எந்த தனி  நபருக்கும் எதிராக நான் போராடவில்லை. மாறாக மாநிலத்தில் நிலவும் வறுமை, ஊழல் மற்றும் அசாமின் அழிவுக்கு எதிராகவே போராடுகிறேன்.

126 உறுப்பினர்களை கொண்ட அசாம் சட்ட சபைக்கு அடுத்தமாதம் 4 மற்றும் 11-ந்தேதிகளில் 2 கட்டமாக தேர்தல்நடக்கிறது. அங்கு முதல் முறையாக ஆட்சியமைக்கும் நோக்கில், மாநிலகட்சிகளான அசாம் கணபரிஷத், போடோலாந்து மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பா.ஜ.கட்சி தேர்தலை சந்திக்கிறது. இதற்காக முதல்மந்திரி வேட்பாளராக மத்திய இணைமந்திரி சர்பானந்தா சோனோவால் அறிவிக்கப்பட்டுள்ளார்.

அங்கு பா.ஜ.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று பிரசார கூட்டத்தில்  பேசியது:-

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் நலன் குறித்து முதல்வர் ச ...

மக்கள் நலன் குறித்து முதல்வர் சிந்திப்பாரா ? அண்ணாமலை கேள்வி ''தனது கட்சியினரின் நலனை விட்டுவிட்டு, வாக்களித்த தமிழக மக்களின் ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்பட ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்த வேண்டும் – பெல்ஜியம் மன்னருடன் பிரதமர் மோடி பேச்சு வர்த்தகம், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து, பெல்ஜியம் ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இ ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை – அமித்ஷா '' இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை,'' என ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்ச ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்சங்கர் பதில் '' தமிழக மீனவர்கள் விவகாரத்தில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அண்ணாமலை நெகிழ்ச்சி ஏழு இஸ்லாமிய நாடுகள் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அர ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அரசு கர்நாடகாவில், நம்ம யாத்ரி என்ற தனியார் டாக்ஸி சேவை ...

மருத்துவ செய்திகள்

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...