மழை வெள்ளம் பொழிந்து கொண்டிருந்தது. மக்கள் மழையில் தத்தளித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய முதலமைச்சர் வரவில்லை. பல விமர்சனங்களுக்குப் பின் விரைவு பதிலாக வாகனத்தில் சுற்றிவிட்டு மக்களை சந்தித்து விட்டது சரிகட்டப்பட்டது.
தமிழக அரசிடம் இருந்து எந்த கோரிக்கையும் வருவதற்கு முன்னாலேயே ராணுவம் அனுப்பப்பட்டது. முதல்வர் கோரிக்கை வைப்பதற்கு முன்னாலேயே பல துறை அமைச்சர்கள் தமிழக அரசைத் தொடர்பு கொண்டு உதவிகளை செய்ய ஆரம்பித்தனர். முதல்வரை சந்திக்க வேண்டும் என்ற மக்களின் கனவு நிறைவேறாத கனவாகவே போய் கொண்டிருந்தது. வெள்ளப்பகுதிகளை பார்க்க பிரதமர் வருகிறேன் என்று சொன்ன உடன், அவசர அவசரமாக, மக்களை nஉறலிகாப்டர் மூலம் சுருக்கமாக ஒரு சுற்றுப் பயணத்தில் முடித்தார் முதல்வர்.
வெள்ள நிவாரண அறிக்கை வந்தால் உதவி அளிக்கலாம் என்று வழி முறைக்கு காத்திருந்த மத்திய அரசிடம் கூட அறிக்கை சமர்ப்பித்தது தாமதம். பல முதலமைச்சர்கள் தங்கள் மாநில உதவிகளை செய்ய பிரதமரைச் சென்று சந்தித்தபோது கூட தமிழக மக்களுக்கு அந்த வாய்ப்பு முதல்வரால் வழங்கப் படவே இல்லை.
ஆக, மத்திய அமைச்சர் பியூஸ் கோயிலின் குற்றச்சாட்டு ஏதோ ஒரு நிகழ்வுக்கான குற்றச்சாட்டு அல்ல. மக்களை மட்டுமல்ல, மந்திரிகளும் சந்திக்க முடியாத ஓர் முதல்வாராக தமிழக முதல்வர் இருக்கிறார் என்பது பொதுவான தமிழக நிலை என்பதுதான் அதன் சாராம்சம்.
பன்னீர் செல்வம் அவர்கள் 2015 ஆகஸ்ட் 7-ம் தேதி பிரதமரை சந்தித்து முதல்வர் மனு கொடுத்தார் என்று சொன்னார்கள். இல்லை முதல்வரை பிரதமர் சந்தித்த போது அது கொடுக்கப்பட்டது. முதல்வர்கள் மாநாட்டில் கூட தமிழக பிரதிநிதியாக முதல்வர் கலந்து கொண்டது கிடையாது. நம் மாநிலத்தில் பிறந்து விண்ணில் புகழாய் மறைந்த திரு. அப்துல்கலாம் அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்த பிரதமர் பறந்து வருகிறார். முதல்வர் மறந்து மறுத்து இருக்கிறார்.
ஆக, காண முடியாத முதல்வரை காணொளி முதல்வர் என்று பியூஸ் கோயல் சொல்லியிருக்கிறார். பல ரயில்வே திட்டங்கள் மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் நடைபெறவில்லை. முதல்வரை சந்திப்பது என்பது இயலாத சரித்திர சம்பவம் போல முன்னிறுத்தப்படுகிறது. கடிதம் மூலம் தெரியப்படுத்துவதை, பிரதமரை கண்டு தெரியப்படுத்துவோம் என்று ஒரு நாளும் முதல்வர் நினைத்ததில்லை. அதனால் திரு. பன்னீர் செல்வம் அவர்கள் எத்தனை பதில் அறிக்கைகள் கொடுத்தாலும், அது பியூஸ் கோயில் அவர்களின் குற்றச்சாட்டுக்கு பதிலாகாது. இன்று அறிக்கை கொடுத்துக் கொண்டிருக்கும் பன்னீர் செல்வம் எத்தனை முறை முதல்வரை சந்திக்க முடிந்தது என்பதும் அவருக்கேத் தெரியாத செய்தி என்பதும் அவர் அறிந்த செய்தியே…
இப்படிக்கு
என்றும் மக்கள் பணியில்
(டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன்)
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ... |
இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ... |
Leave a Reply
You must be logged in to post a comment.