குடிசை சீரமைப்பு திட்டத்தின்கீழ் சிறுதொழில் செய்வோருக்கு தாராவி யிலேயே இடம் ஒதுக்கப்படும் என முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உறுதி அளித்துள்ளார்.
தாராவி பகுதியின் வளர்ச்சி குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் மும்பை மந்திரால யாவில் உள்ள அவரது அறையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில வீட்டுவசதித்துறை மந்திரி பிரகாஷ் மேத்தா, கேப்டன் தமிழ்செல்வன் எம்.எல்.ஏ., வர்ஷா கெய்க்வாட் எம்.எல்.ஏ., ரவீந்திரவைக்கர் எம்.எல்.ஏ., தாராவி பா.ஜனதா மண்டல தலைவர் மணிபாலன் மற்றும் மாநகராட்சி, மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் குடிசை சீரமைப்பு திட்டத்தின்கீழ் தாராவியில் உள்ள குடிசைப் பகுதிகளை எப்படி மேம்படுத்துவது என்பது குறித்து விவாதிக்க ப்பட்டது. அப்போது கேப்டன் தமிழ்செல்வன் எம்எல்ஏ., முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிசிடம் கூறியதாவது:–
குடிசை சீரமைப்பு திட்டத்தின்கீழ் தாராவியில் குடிசை வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு அந்தபகுதியிலேயே வீடு கட்டி கொடுக்கப்பட உள்ளது. ஆனால் அங்கு சிறு தொழில் செய்வோருக்கு வேறு பகுதியில் இடம் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அரசு அந்ததிட்டத்தை கைவிட்டு விட்டு தாராவியில் பல்வேறு சிறு, குறு தொழில்களில் ஈடுபட்டு வருபவர்களுக்கு அந்தபகுதியிலேயே தொழில் செய்யும் வகையில் இடம் ஒதுக்கித்தர வேண்டும் என்று கூறினார்.
கேப்டன் தமிழ்செல்வனின் இந்த கோரிக்கையை ஏற்று, முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தாராவி பகுதியில் சிறு தொழில் செய்வோருக்கு அந்த பகுதியிலேயே இடம் ஒதுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ... |
கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ... |
முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ... |
Leave a Reply
You must be logged in to post a comment.