சுங்கச் சாவடிக் கட்டணம் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது சட்ட விரோதமானது என விமர்சனம் செய்துள்ளார்.
இந்தக் கட்டண உயர்வானது 2007-ஆம் ஆண்டுச் சட்டங்களின் படி ஒப்பந்தம் போடப்பட்டதாகும். அப்போது மத்திய அமைச்சரவையில் பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் இடம்பெற்றிருந்தார். இதை ராமதாஸ் மறந்துவிட்டாரா? மறைத்துவிட்டாரா?
இது சட்ட விரோதம் என்றால், அந்தச் சட்ட விரோதமான அமைச்சரவையில் அன்புமணி பங்கு பெற்றதை ராமதாஸ் ஏற்றுக் கொள்கிறாரா?
கடந்த என்.டி.ஆ ஆட்சியில் 6 வருடங்களுக்கு மட்டும் எனப் போடப்பட்ட ஒப்பந்தங்கள், பாமக இடம் பெற்றிருந்த உபி.ஏ அரசால் 25 வருடங்கள் என மாற்றப்பட்டதை ராமதாஸ் மறந்துவிட்டாரா? மறைத்துவிட்டாரா?
ஒப்பந்தகள் காலாவதியான பிறகும் நான்கு / ஆறு வழிப் பாதைகள், பாலங்கள் என்கிற அடிப்படையில் 25 வருடங்களுக்கு ரத்து செய்ய முடியாத படி புதிய ஒப்பந்தங்களைப் போட்டது பாமக அங்கம் வகித்த உபிஏ என்பதை ராமதாஸ் மறைக்கிறாரா? மறுக்கிறாரா?
சென்ற 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக சுங்கச் சாவடிகள் கட்டணம் உயர்த்தப்பட்டதாகச் சொல்லியிருப்பதை ராமதாஸ் நிரூபிக்க முடியுமா?
மொத்த விலைக் குறியீட்டின் அடிப்படையில் எந்த சுங்கச் சாவடிக் கட்டணமும் உயர்த்தப்படவில்லை. ராமதாஸின் குற்றச்சாட்டு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாதது.
இந்தியா முழுவதும் 120 சுங்கச் சாவடிகள் அடையாளம் காணப்பட்டு இரு தமிழகச் சுங்கச் சாவடிகள் உள்ளிட்ட 65 சுங்கச் சாவடிகள் மோடி ஆட்சியில் மூடப்பட்டது என்பதை ராமதாஸ் உணர வேண்டும்.
உண்மை தெரியாமல், யாராலோ எழுதிக் கொடுக்கப்படும் அறிக்கைகளை இனி ராமதாஸ் வெளியிடாமல் இருப்பது நல்லது.
என்றும் தாயகப் பணியில்
எஸ்.ஆர்.சேகர்
மாநிலப் பொருளாளர்
செய்தித் தொடர்பாளர
Leave a Reply
You must be logged in to post a comment.