வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக் கிகளை பயன் படுத்தி தீவிரவாதத்திற்கு முடிவுகட்ட முடியாது. ஆனால் சமூகத்தில் அதற்குரிய சூழலை உருவாக்குவது இளைஞர்கள் தீவிரவாதி களாவதை கட்டுப்படுத்தும் என பிரதமர் நரேந்திரமோடி இன்று கூறியுள்ளார். பெல்ஜியம் நாட்டில் சமீபத்தில் பிரசல்ஸ் நகரின் விமானநிலையம் மற்றும் ரெயில்வே நிலையம் ஆகியவற்றின்மீது தாக்குதல்கள் நடந்தன.
இந்நிலையில், அந்நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் அங்கு கூடியிருந்த இந்தியர்கள் அடங்கிய கூட்டத்தின் முன் பேசும் பொழுது, எந்த ஒருமதமும் தீவிரவாதத்தை போதிக்கவில்லை . உலக தலைவர்கள் பலருடன் பேசியுள்ளேன் தீவிரவாதத்தில் இருந்து மதத்தை வேறுபடுத்திடவேண்டிய அவசியத்தை அவர்களிடம் உணர்த்தியுள்ளேன் .
சமீபத்தில் புதுடெல்லியில் நடந்த சுபி மாநாட்டில், இஸ்லாமிய பண்டி தர்கள் தீவிரவாதத்திற்கு ஒரு மித்த குரலில் கண்டனம் தெரிவித்தனர் , இது போன்ற குரல்கள் அதிகம் எழுவதினால், நமது இளைஞர்களை தீவிரவாதிகள் ஆவதில்இருந்து நாம் வேகமுடன் காத்திடலாம்.
தங்களது குழந்தைகள் தீவிரவாதத்தில் ஈடுபடுகின்றனர் என நூற்றுக் கணக்கான பெற்றோர் அழுது கொண்டுள்ளனர். வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் மற்றும் பிஸ்டல்கள் ஆகியவற்றினால் தீவிரவாதத்தை முடிவுக்குகொண்டு வர முடியாது.
நம் சமூகத்தில் அதற்குரிய ஒருசூழலை உருவாக்க வேண்டியதேவை நமக்கு உள்ளது. பல்வேறு நாடுகளிலும் உள்ள இளைஞர்கள் பரவலாக தீவிரவாதிகளாகி இறுதியில் போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் அவர்கள் செயல் படுவது குறித்த முக்கியத்துவத்தை அவரது கருத்து தெரிவிக்கின்றது.
"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ... |
பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ... |
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.