சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வுகுறித்து மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.
இதுதொடர்பாக, மத்திய இணை அமைச்சரின் நாகர்கோவில் முகாம் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை; தமிழகத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் மேம்பாடுசெய்யப்பட்டு பராமரிக்கப்படும் கட்டண சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளில் ஏப். 1 ஆம் தேதி முதல் திருத்தம் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயன்பாட்டு கட்டணங்கள் குறித்த தவறான கருத்துக்கு கீழ்க்கண்டவாறு விளக்கம் அளிக்கப்படுகிறது.
இந்த கட்டண திருத்தம், தேசியநெடுஞ்சாலை கட்டணம் (DETERMINATION OF RATES & COLLECTIONS) விதி 2008 இன் கீழ் நிர்ணயம் செய்யப் படுகிறது. இந்த திருத்தமானது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல்மாதம் முதல் தேதி முதல் செயலாக்கம் செய்யப்படுவது வழக்கம். இந்தகட்டணத் திருத்தம் நிகழாண்டில் மொத்தவிலை குறியீட்டு எண் (WPI) அடிப்படையில் 2008 கட்டண விதிகளின்படி நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன் அடிப்படையில், தற்போது நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள கட்டண திருத்தம் உண்மையில் மிகவும் குறைவான ஒன்றே. அதாவது கடந்த ஆண்டு கட்டணத்தை ஒப்பிடுகையில் வெறும் 3 சதவீத உயர்வுமட்டுமே. மேலும் திருத்தக் கட்டணம் ஐந்து ரூபாய்க்கு முழுமைப்படுத்தப் பட்டதில் (Rounded off to Next Five Rupees) பெரும்பாலான சுங்கச்சாவடிகளில் இலகு ரக வாகனங்களுக்கான கட்டணங்களில் எந்த உயர்வும் இல்லை.
நிகழாண்டு கட்டண திருத்தம் தேசியநெடுஞ்சாலை பயண கட்டண விதி 2008 இன் கீழ் செயல்படும் இந்தியா முழுவதும் உள்ள 42 சுங்கச் சாவடிகளில், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல்மாதம் முதல் நடைமுறைப் படுத்தப்படுகிறது. அதன் அடிப்படையில், தமிழகத்தில் செயல்படும் 42 சுங்கச் சாவடிகளில், 20 சுங்கச் சாவடிகளில் மேற்கூறிய கட்டண திருத்தம் நடைமுறைக்கு வந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ... |
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |
தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.