காங்கிரஸின் தவறான கொள்கைகளால் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் காணப்படுகிறது

காங்கிரஸின் தவறான கொள்கை களால் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் காணப் படுவதாக மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை இணையமைச்சர் கிரிராஜ்சிங் குற்றம்சாட்டினார்.

 கடந்த மக்களவைத் தேர்தலின் போது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் அளிக்கப்படும் என்று பாஜக அளித்த வாக்குறுதி விரைவில் நிறைவேற்றப்படும். அதற்கான பணிகளை மோடி அரசு விரைவில் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

 இது குறித்து உத்தரப்பிரதேச மாநிலம், பலியாவில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது: திறமையான நபர்கள் 70 சதவீதம்பேரை கொண்ட நாடுகள் வேகமாக முன்னேறி சென்றுள்ளன. கடந்த காங்கிரஸ் ஆட்சி கடைப் பிடித்து வந்த தவறான பொருளாதாரக் கொள்கைகளால் மோடி அரசு பதவியேற்றபோது, திறமையான இளைஞர்களின் சதவீதம் வெறும் 2.5-ஆக இருந்தது.

 தற்போது 2016-17-ஆம் நிதியாண்டில் வேலை வாய்ப்புகளுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கும். வேலையி ல்லாதோருக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கும் பணிகளை மத்திய அரசு விரைவில்தொடங்கும்.
 கடந்த பிகார் சட்டப் பேரவைத் தேர்தலின்போது, நிதீஷ்- லாலு கூட்டணி ஆட்சிக்குவந்தால், அது காட்டாட்சியாக இருக்கும் என்று பாஜக மக்களை எச்சரித்தது. அதற்கேற்ப, எம்எல்ஏ.,க்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு வருகின்றன. எங்கள் கட்சி அஞ்சியது தற்போது உண்மையாகி உள்ளது என்றார் கிரிராஜ் சிங்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...