ஹைதராபாத் பல்கலைக் கழக ஆராய்ச்சி படிப்புமாணவர் ரோஹித் வேமூலாவின் தற்கொலை விவகாரத்தில், அடிப்படை பிரச்னைக்கு தீர்வுகாண்பதற்கு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் விரும்பவில்லை, இதைவைத்து அரசியல் ஆதாயம் தேடவே விரும்புகின்றனர் என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு குற்றம் சாட்டினார்.
இது குறித்து அவர், ஹைதராபாதின் புறநகர்ப் பகுதியான பெளரம்பேட்டை கிராமத்தில் புதன் கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது:
ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் ரோஹித் வேமூலாவுக்கு முன்பு, 10 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். எதிர்க் கட்சிகளின் மொழியில், அவர்களில் சிலர் தலித்துகள். ஆனால், அரசியல் தலைவர்கள் யாரும் அப்போது வரவில்லை. யாரும் இரங்கல் தெரிவிக்க வில்லை. ஏனென்றால், அப்போது காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. ஆனால், கடந்த ஜனவரிமாதம் ரோஹித் வேமூலா தற்கொலை செய்துகொண்ட போது, அவர்கள் அனைவரும் புனிதயாத்திரை வருவதுபோல் வந்தனர்.
அத்தகைய தற்கொலை நிகழ்ச்சிகள் மீண்டும் நடைபெறாமல் தடுத்து, சமூக நல்லிணக் கத்தை நிலைநாட்டுவதற்குப் பதிலாக, பிரதமர் நரேந்திரமோடி மீது குறைகூறுவதிலேயே எதிர்க்கட்சிகள் முனைப்பாக உள்ளன.
அடிப்படை பிரச்னை என்ன? ரோஹித் வேமூலா தற்கொலைக்கு ஏன் முயன்றார்?, குற்றச்சாட்டுகள் சரியானவையா? பிரச்னைக்கு தீர்வுகாண்பது எப்படி? என்பது குறித்து ஆய்வு செய்வதற்கு பதிலாக, "மோடி' என்ற வார்த்தையை மட்டுமே அவர்கள் உச்சரித்தனர்.
அரசியலில் இருந்து, ஜாதிகளும், மதங்களும் விலகியிருக்க வேண்டும். அரசியல் ஆதாயங் களுக்காக சிறுபான்மையினரை தாஜா செய்யும் நடவடிக்கைகளில் அரசியல்கட்சிகள் ஈடுபடுகின்றன. மதம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயமாகும். கோயில்களில் பெண்கள் நுழைவதற்கு தடையில்லாத அனுமதிவழங்கப்பட வேண்டும் என்றார் வெங்கய்ய நாயுடு.
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |
டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ... |
முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.