கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் கலந்துக்கொள்ள கேரள கண்ணூருக்கு செல்கிறார் தமிழக முதல்வர். சிபிஎம் அவரின் கூட்டனிகட்சி அதனால் அவர் செல்லட்டும் யாரும் தடுக்கவில்லை. ஆனால் ஸ்டாலின் அவர்கள் தமிழக முதல்வர். ஆதனால் முதல்வர் என்ற நிலையில் அவர்செல்லும்போது தமிழகத்தின் நலனைபற்றி பேச வேண்டும் என்பது ஒவ்வொரு தமிழனின் எதிர்பார்ப்பு.
முதல்வரின் புத்தக வெளியீட்டு விழாவில் கேரள முதல்வர்வந்தார் அப்போது தமிழ்நாடு – கேரளா சார்ந்த பிரச்சனைகளை TN-CM தனிப்பட்ட முறை யிலாவது பேசுவார் என்று எதிர்பார்த்தோம் பேசவில்லை.
அதனால் தற்போதாவது முல்லை பெரியார் பிரச்சனை, சிறுவாணி நதிநீர் பிரச்சனை, தமிழகத்தின் 5 மாவட்டங்கள் பலைவன மாக்கும் பாம்பாறு நதி நீர் பிரச்சனை, கேரளாவில் இருந்து தமிழகத்தில் கொட்டப்படும் மருத்துவ மற்றும் இதரகழிவுகள் பிரச்சனை. அதுமட்டுமல்லாது அங்குவாழும் தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவது பற்றி
ஒரு 5 நிமிடமாவது ‘முதல்வர் பிரையி விஜயனிடம் பேசி சுமூகதீர்வு காண்பார் என தமிழக பாஜக எதிர்பார்க்கிறது.
கண்ணூர் என்பது கம்யூனிஸ்ட் கட்சிகோட்டை தனது அரசியல் எதிரிகளை வன்முறையின் மூலம் தீர்த்துக் கட்டி இரத்தக்குளமாக்கிய பகுதி.
நாட்டின் அரசியல் வன்முறை அதிகம்நடக்கும் மாவட்டம். அத்தகைய கண்ணூருக்கு சென்று அதன்மாடலை பின்பற்றி தமிழகத்தில் திராவிட மாடலோடு கண்ணனூர் மாடலை இணைக்க மாட்டார் என நம்புகிறோம்
நன்றி SR சேகர்
மாநிலப் பொருளாளர்
BJP – TN
"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ... |
பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ... |
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |