ஜெய்ஹிந்த் செண்பகராமன் புரட்சி வீரனின் சாம்பல்தான் வந்தது

செண்பகராமன் ஒரு பெரிய சுதந்திரப் போராட்ட வீரர். கேரளா திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ஒரு தமிழ்க் குடும்பத்தில் பிறந்தார். ஜெர்மனியில் தங்கி இந்திய விடுதலைக்காகப் போராடி வந்தார்.

உடல் நலம் சரியில்லாமல் படுத்த படுக்கையில் இருந்த போது, ஒரு நாள் தன் மனைவி லட்சுமியின் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டே பேசிக் கொண்டு இருக்கிறார்.

லட்சுமி, "எனக்கு மனதில் நீண்ட நாட்களாக ஒரு ஆசை இருக்கிறது. நமது பாரத நாடு சுதந்திரம் பெற்றதும், ஒரு கப்பலில் நமது நாட்டுக்குச் செல்ல வேண்டும். அந்தக் கப்பலில் நமது நாட்டின் கொடி பறக்க வேண்டும்.

ஒரு வேளை நமது நாடு சுதந்திரம் பெறும் போது நான் உயிரோடு இல்லை என்றால், எனது அஸ்தியை பாதுகாப்பாக வைத்து நமது நாட்டின் கொடி பறக்கும் கப்பலில் எடுத்துச் சென்று, என் தாயின் அஸ்தி கரைக்கப்பட்ட கரமணை ஆற்றில் கரைத்துவிடு" என்று சொல்கிறார்.

ஆம், அவர் சொன்ன மாதிரியே நமது நாட்டு விடுதலைக்கு முன்பே 1934ல் காலமாகி விடுகிறார்.அவர் இறந்த பின் இன்னல்களுக்கு ஆளான அவரது மனைவி 1936ல் பம்பாய் வந்து, நீண்ட காலம் தான் யார் என்பதைத் தெரிவிக்காமலேயே வாழ்ந்து வந்தார்.

1966ல் அவரது அஸ்தி "ஐ.என்.எஸ்-டெல்லி " என்ற இந்தியக் கப்பற்படைக் கப்பல் மூலம் கொச்சிக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து திருவனந்தபுரம் கரமனை ஆற்றில் கரைக்கப்பட்டது. குமரி முனையிலும் கரைக்கப்பட்டது.

கடைசி வரை சுதந்திரம் பெற்ற இந்தியாவைப் பாhக்க வேண்டும் என்ற செண்பகராமனின் கனவு நிறைவேறவே இல்லை. அவரது சாம்பல்தான் இந்தியாவுக்கு வந்தது.

"ஜெய்ஹிந்த்" கோஷத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் செண்பகராமன். எனவே அவரை, "ஜெய்ஹிந்த் செண்பகராமன்" என்று அழைத்தார்கள். பிறகு இதனை நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் வெகுஜன மக்களின் எழுச்சி கோஷமாக மாற்றினார்.

அவரது வாழ்க்கை 43 வருஷங்கள். இதில் 26 வருஷம் தலைமறைவு வாழ்க்கை.யாராவது கற்பனை செய்து பார்க்க முடியுமா? சுவிட்சர்லாந்து சென்று பொறியியல் படிப்பில் பட்டம் பெற்று, ஜெர்மன் சென்று பொறியியல் கல்வியில் டாக்டர் பட்டம் பெறுகிறார்.

ஜெர்மனியில் இருந்து கொண்டு இந்திய நாடு விடுதலை பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு சாகசங்கiச் செய்தார்.ஆங்கிலேயர்களின் அராஜகங்களை, அதனால் இந்திய மக்கள் படும் துன்பங்களைப் பற்றி பிரச்சாரம் செய்வதற்காக ஞசுடி iனேயை என்ற இதழை நடத்தி வந்தார்.

இன்றும் நம் நாடி நரம்புகளை முறுக்கேற்றும் ஒவ்வொரு தேச பக்தனின் ரத்ததைச் சூடேற்றச் செய்யும் "ஜெய்ஹிந்த்" என்ற கோஷத்தை முதன்முதலில் எழுப்பிவயர் செண்பகராமன்தான். அதன் பின் 26 வருஷங்களுக்குப் பிறகு வியன்னாவில் சுபாஷ் சந்திரபோஸைச் சந்தித்த போது சுபாஷை இந்த "ஜெய்ஹிந்த்" கோஷத்தை முழங்கச் செய்ய உத்வேக மூட்டியவர் செண்பகராமன்.

சர்வதேச இந்திய ஆதவுக் குழு என்பதாக இந்திய தேசிய ராணுவம் ஒன்றையும் அமைத்தார். பின்னாளில் இதுவே நேதாஜியின் இந்திய தேசிய விடுதலை ராணுவம் (ஐ,சூ,¬ உருவாக முன்னோடியாக இருந்தது.

இடைக்கால இந்திய அரசு

ஆப்கனின் தலைநகரான காபூலுக்கு வந்து அங்கு இடைக்கால இந்திய குடியரசு ஒன்றை நிறுவினார். அதன் அமைச்சரவையில் வெளிநாட்டு அமைச்சராக பொறுப்பேற்றார். இந்த இடைக்கால அரசை பிரிட்டனின் முதல் எதிரி நாடான ஜெர்மனி அங்கிகரித்தது. ஒரு பெரிய கப்பல் படை நிறுவி இந்தியா மீது படையெடுத்து வெள்ளையனை விரட்ட வேண்டும் என திட்டம் போட்டார்.

எம்டன்

நீ பெரிய எம்டனா? என்று சிலரைப் பார்த்துக் கேட்கும் பழக்கம் நமக்கு இருந்தது. சாதிக்க முடியாத காரியத்தை ஒருவன் சாதித்து விட்டால் அவனைப் பெரிய எம்டன் என்று சொல்வார்கள். எம்டன் என்ற சொல் எங்கிருந்தது வந்தது?

ஜெர்மனிக்குச் சொந்தமான "எம்டன்" என்ற கப்பலில் செண்பகராமன் சென்னை நோக்கி வந்தார். கப்பலில் இருந்த பிரங்கி மூலம் சுட்ட குண்டுகள் செயின்ட் ஜார்ஜ் கோட்டையருகே வந்து விழுந்தது. இந்தச் செய்தியைக் கேட்ட ஆயிரக்கணக்கான மக்கள் சென்னையை விட்டு ஓடி விட்டார்கள் என்று இதழ்களில் செய்திகள் வெளியிடப்பட்டன.

கடைசிவரை சுதந்திர இந்தியாவைப் பார்க்க வேண்டும் என்ற செண்பகராமனின் கனவு நிறைவேறவே இல்லை. அவரது சாம்பல் தான் இந்தியாவுக்கு வந்தது.

TAGS; செண்பகராமன்,சுதந்திரப், போராட்ட வீரர், இந்திய விடுதலைக்காகப், போராடி வந்தார், செண்பகராமனின், கனவு, ஜெய்ஹிந்த், ஜெய்ஹிந்த் செண்பகராமன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...