50 ஆண்டுகளில் தமிழகத்தில் எவ்விதவளர்ச்சியும் ஏற்படவில்லை என்று மத்திய ரயில்வேதுறை அமைச்சர் சுரேஷ் பிரபு கூறினார்.
மதுரையில்அவர் பிரசாரம் மேற்கொண்டு பேசியதாவது:
தமிழகத்தில் இருதிராவிடக் கட்சிகளின் ஆட்சியில் கடந்த 50 ஆண்டுகளில் எவ்விதவளர்ச்சியும் ஏற்படவில்லை. அவர்கள் மாநில நலனை விட தங்கள் நலனிலே அதிக அக்கறையுடன் செயல்படுகின்றனர்.
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி வெளிப்படையான நிர்வாகத்தை நடத்திவருகிறார். அவர் பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், விவசாயிகள் என அனைத்துத் தரப்பினருக்குமான நலத்திட்டங்களைச் செயல்படுத் தியுள்ளார். மீனவர், நெசவாளர் பிரச்னையைத் தீர்க்கவும் திட்டங்களைச் செயல்படுத்துகிறார். அவருக்கென தனிக்குடும்பம் இல்லை. மக்கள்தான் அவருக்கு முக்கியம் என செயல்படுகிறார்.
மத்திய அரசு தமிழகத்தில் ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைத் துறை மூலம் எதிர்காலத்துக்கான பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மதுரையில் முன்பிருந்த பல தொழிற் சாலைகள் தற்போது மூடப்பட்டுவிட்டன.
பாஜக ஆட்சிக்குவந்தால் மதுரையில் புதியதொழிற்சாலைகள் அமைக்கப்படும். அதன்மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். வேலை யில்லாத் திண்டாட்டம் அறவே ஒழிக்கப்படும்.
மதுரை தெற்குத்தொகுதி பாஜக வேட்பாளர் கூறிய பலகோரிக்கைகள் பாஜக மாநில தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மத்தியில் ஆட்சியில் உள்ள கட்சியே மாநிலத்திலும் அதிகாரத்தில் இருக்க வேண்டும். அப்போதுதான் மாநிலத்தில் வளர்ச்சித் திட்டங்களை தங்குதடையின்றி செயல்படுத்த முடியும். ஆகவே பாஜகவுக்கு வாக்களித்து தமிழகத்தில் வளர்ச்சி ஏற்பட வாய்ப்பை ஏற்படுத்தவேண்டும் என்றார்.
Leave a Reply
You must be logged in to post a comment.