டாஸ்மாக் மதுக் கடை வேலை நேரத்தை 8 மணிநேரமாக குறைக்கவேண்டும் என, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
மத்தியதகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் நெல்லை மண்டல கள அலுவலகம் சார்பில், மத்திய அரசின் நலத் திட்டங்கள் குறித்து விளக்கும் சிறப்புமுகாம், நாகர்கோவில் அருகே அளத்தங்கரையில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நிருபர்களிடம் கூறிய தாவது:
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. இத்திட் டங்கள் குறித்து பொது மக்களிடம் விளக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
தமிழக முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும் சட்டப்பேரவையில் ஒருவருக்கொருவர் வணக்கம் தெரிவித்துக் கொண்டது நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாகும்.
முதல்வர் ஜெயலலிதா 5 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார். இதில் டாஸ்மாக்கடைகளின் வேலை நேரம் குறைப்பு குறித்து கையெழுத்திட்டிருப்பது வரவேற்கத்தக்கது. பூரண மதுவிலக்கு என்பதுதான் பாஜகவின் கொள்கை. இருந்தாலும்,டாஸ்மாக்கடைகளின் நேரத்தை மேலும் 2 மணிநேரம் குறைத்து, பணியாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரமாக குறைக்க வேண்டும்.
வங்கிகளில் வாங்கியுள்ள விவசாய நகைக் கடன் மீது அரசு கவனம் செலுத்தவேண்டும். ஏனென்றால் பலர் விவசாயக்கடன் என்ற பெயரில் வாங்கி அதை வெளியாட்களிடம் அதிகவட்டிக்கு வழங்குகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ... |
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |
தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.