அமெரிக்க அதிபராக தொடர்ந்து 2.,வது முறை பொறுப்புவகிக்கும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்த ஆண்டின் இறுதியில் அப்பதவியில் இருந்து ஓய்வுபெறுகிறார். அதற்குமுன்னதாக உலகின் முக்கிய நாடுகளை சேர்ந்த தலைவர்களுக்கு அவர் பிரியாவிடைவிருந்து அளிக்கிறார்.
இந்தவிருந்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜூன் ஏழாம் தேதி வாஷிங்டன் நகருக்கு செல்கிறார். அதற்கு முன்னதாக கத்தார், சுவிட்ஸர்லாந்து மற்றும் மெக்சிகோ நாட்டிலும் அவர் சுற்றுப் பயணம் செய்கிறார்.
இதற்கிடையில், வரும் ஜுன் 4-ம் தேதி ஆப்கானிஸ்தான் நாட்டுக்குசெல்லும் மோடி, அங்கு ஹெரட் மாகாணத்தில் 1400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தியா சார்பில் கட்டித் தரப்பட்டுள்ள சல்மா அணைக் கட்டை திறந்துவைத்து, அந்நாட்டு மக்களுக்கு அர்ப்பணம் செய்கிறார்.
இந்தியா-ஆப்கானிஸ்தான் நாடுகளுக் கிடையில் நிலவும் நட்புறவின் அடையாளமாக 20 கிலோ மீட்டர் நீளம், 3 கிலோ மீட்டர் அகலத்தில் தற்போது தரமுயர்த்தி கட்டிமுடிக்கப்பட்டுள்ள இந்த அணைக்கட்டின் மூலம் 42 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், சுமார் 80 ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்கள் பாசனவசதியை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இந்தியாவால் கட்டித்தரப்பட்ட ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்தையும் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் திறந்துவைத்தார் என்பது நினைவிருக்கலாம்.
வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ... |
நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ... |
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.