பிரதமர் நரேந்திர மோடியை தனிப்பட்டமுறையில் கொச்சைப்படுத்தி பேசுவதை தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் எச்சரித்துள்ளார்.
பிரதமர் மோடியை மிகக் கடுமையாக விமர்சித்து வரும் இளங்கோவனை கண்டித்து சென்னை வள்ளுவர்கோட்டம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப் பாட்டத்தில் தமிழிசை பேசிய தாவது: பிரதமர் மோடியைப் பற்றி தனிப்பட்ட முறையில் கொச்சைப்படுத்தி இளங்கோவன் தொடர்ந்து பேசிவருகிறார். எந்தெந்த நாடுகள் மோடிக்கு விசா கொடுக்க மறுத் ததோ அந்த நாடுகள் எல்லாம் இப்போது போட்டி போட்டுக்கொண்டு மோடியை அழைக் கின்றன.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் மோடி ஆற்றிய உரை அந்நாட்டில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளது. மோடியின் பேச்சு அமெ ரிக்க எம்.பி.க்களை வசீகரித்துள் ளது. 66 முறை கைதட்டி எம்.பி.க்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத் தியுள்ளனர்.
ஆனால், இளங்கோவன் மோடியை கொச்சைப்படுத்தி பேசி வருகிறார். அரசின் செயல்பாடு களையும், கொள்கை ரீதியாகவும் விமர்சனம் செய்வதை பாஜக வரவேற்கிறது. நாட்டின் பிரதமரை தனிப்பட்ட முறையில் கொச்சைப்படுத்தி பேசுவது நாட்டையே அவமானப் படுத்தும் செயல் என்பதை இளங்கோவன் உணர வேண்டும். இதுபோன்ற செயல்பாடுகளை அவர் நிறுத்திக் கொள்ளவேண்டும்.
முதல்வர் ஜெயலலிதா, காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி ஆகியோரையும் இளங்கோவன் கொச்சைப்படுத்தி பேசியுள்ளார். என்னைப்பற்றி பேசும்போது தமிழிசையா? தமிழ் வசையா? என அநாகரிகமான முறையில் விமர்சித்துள்ளார். நாகரிகஅரசியலை அவர் கற்றுக் கொள்ள வேண்டும்.
எவ்வித ஆதாரங்களும் இல் லாமல் வாய்க்கு வந்தபடி பிரதமர், மத்திய அமைச்சர்கள் மீது குற்றச் சாட்டுகளை சுமத்தி வருகிறார். இது கடும் கண்டனத்துக்குரியது.
பாஜகவுக்கு டெபாசிட்கிடைக்க வில்லை என இளங்கோவன் பேசியிருக்கிறார். கடந்த மக்களவைத் தேர்தலில் 38 தொகுதிகளில் காங்கிரஸ் டெபாசிட் இழந்தது. வரும் உள்ளாட்சித்தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட உள்ளது. இளங்கோவனுக்கு துணிவிருந்தால் தனித்துபோட்டியிட்டு செல்வாக்கை நிரூபிக்கட்டும் இவ்வாறு தமிழிசை பேசினார்.
இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். |
தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.