ஒரேசமயத்தில் மக்களவைக்கும், சட்டப் பேரவைகளுக்கும் தேர்தல் நடத்துவதற்கு ஆதரவுதெரிவித்து நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு பாஜக தேசியத்தலைவர் அமித் ஷா கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பான விவாதத்துக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வரவேண்டும் என்றும் அந்த கடிதத்தின் வாயிலாக அவர் அழைப்புவிடுத்துள்ளார்.
காலவிரயம் மற்றும் செலவு களைக் குறைக்கும் வகையில் மக்கள வைக்கும், சட்டப் பேரவைகளுக்கும் ஒரேநேரத்தில் தேர்தல் நடத்தவேண்டும் பிரதமர் மோடி வலியுறுத்தி யிருந்தார். இந்த ஆலோசனைக்கு அதிமுக, அஸ்ஸாம் கண பரிஷத், சிரோமணி அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன. அதேவே ளையில், இந்த ஆலோசனை, நடைமுறையில் செயல்படுத்த முடியாத ஒன்று எனக்கூறி காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில், இந்தவிவகாரம் தொடர்பாக சட்டம் மற்றும் நீதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அமித் ஷா கடிதம் எழுதியிருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிரதமரின் ஆலோசனையை செயல்படுத்து வதற்கான சாத்தியக் கூறுகளை தேர்தல் ஆணையம் ஆராயவேண்டும் என்று அந்தக் கடிதத்தில் அமித்ஷா கேட்டுக் கொண்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ... |
ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ... |
அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.