வருமானவரி கணக்கு தாக்கல் செய்யா விட்டால் அபராதம் விதிக்கவும், வரி ஏய்ப்புசெய்பவர்கள் மீது சிறைதண்டனை உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை எடுக்கவும் வருமான வரித் துறையினருக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நமது நாட்டில் முறையாக வருமானவரி செலுத்தாமல், ஏய்க்கிறவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே போகிறது.
இப்படி வருமானவரி செலுத்தாமல், ஏய்க்கிறவர்கள் மீது சட்டத்தின் பிடியை இறுக்க பாரதீய ஜனதா கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது. இது வரை வருமான வரி செலுத்தாதவர்கள் வரியை அபராத த்துடன் செலுத்தி விட்டால் போதும், சட்டநடவடிக்கையில் இருந்து தப்பிவிடலாம் என்ற நடைமுறை இருந்துவந்தது.
அதில் இப்போது மத்திய அரசு பல அதிரடி மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.அந்தவகையில் வரி ஏய்ப்பு செய்கிறவர்கள் மீது எடுக்கவேண்டிய கடுமையான நடவடிக்கைகள் பற்றிய வழிமுறை குறிப்புகளை மத்திய அரசின் நிதி அமைச்சகத்தின்கீழ் செயல்படுகிற சி.பி.டி.டி. என்னும் மத்திய நேரடி வரிகள் வாரியம், வருமான வரித்துறைக்கு அனுப்பி உள்ளது.
அந்த வழிமுறை குறிப்புகளில் மிகமுக்கியமான ஒன்று, அபூர்வமாக பயன்படுத்தப்படுகிற இந்தியவருமான வரி சட்டம் பிரிவு 276 சி (2) –ஐ பயன்படுத்தவும் அதிகாரிகள் தயங்கக் கூடாது என்பதுதான்.
இந்த சட்டப் பிரிவின்படி, வருமான வரி ஏய்ப்பு செய்கிறவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, 3 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள்வரை கடுங்காவல் சிறைதண்டனை விதிக்க முடியும். சிறை தண்டனையுடன், அபராதமும் விதிக்கஇயலும்.
அத்துடன் அவர்களது சொத்துகளை ஜப்திசெய்து, ஓராண்டுக்குள் விற்பனைசெய்யவும் வழி இருக்கிறது.இந்த சட்டப் பிரிவின்படி நடவடிக்கை எடுப்பதற்கு, டிஆர்ஓ. என்னும் வரிமீட்பு அதிகாரியை வருமான வரித் துறை அமர்த்தி உள்ளது. இந்த டி.ஆர்.ஓ. கட்டமைப்பு வலுப்படுத்தப்பட வேண்டும், தேவையான ஆள்பலத் தையும் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டுள்ளது.
அத்துடன், வேண்டுமென்றே வருமான வரி செலுத்தாதவர்களை கைதுசெய்து, காவலில் வைக்க வகைசெய்கிற வருமான வரிச்சட்டத்தின் விதிகள் 73–ல் இருந்து 81 வரையி லானவற்றை வரிமீட்பு அதிகாரி பயன் படுத்த வேண்டும் என்றும் மத்திய நேரடிவரிகள் வாரியத்தின் வழிமுறை குறிப்புகூறுகிறது.
வேண்டுமென்றே வரி செலுத்தாமல் இருக்கிற போது, தனது அதிகாரத்தை டி.ஆர்.ஓ. பயன்படுத்த வேண்டும்; தொடர்ந்து ஒருவர் நீண்ட காலமாக வரி செலுத்தாமல் ஏய்த்து வந்திருக்கிற போது, அவரை கைதுசெய்து காவலில் வைக்கிற தனது அதிகாரத்தை டிஆர்ஓ. பயன் படுத்த வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
வரி ஏய்ப்பை பொறுத்த மட்டில் எல்லா மட்டத்திலும் வரிவசூல் செய்வது ஒன்றை மட்டுமே முக்கியநோக்கமாக கொண்டு செயல்படவும், இதுதொடர்பாக டி.ஆர்.டி. என்னும் கடன்மீட்பு தீர்ப்பாயம் வரை செல்லவும் டி.ஆர்.ஓ.க்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. அத்துடன், புதிய வழி முறைகளை பின்பற்றி, வரி செலுத்தாமல் யாரும் எளிதில் தப்பிக்கமுடியாது என்பதை உறுதி செய்யவேண்டும் என்று வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
‘வரி செலுத்தாமல் ஏய்க்கிறவர்களின் ‘பான்’ என்னும் வருமான வரி நிரந்தரகணக்கு எண் முடக்கப்பட வேண்டும். இதன் மூலம் சம்பந்தப்பட்ட நபர்கள் எந்தவொரு கடனையும் பொதுத்துறை வங்கிகளில் இருந்து பெற முடியாத நிலையை ஏற்படுத்த வேண்டும்’ எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அது மட்டுமின்றி இதுபற்றி பத்திரப் பதிவாளர்களுக்கு தகவல் தெரிவித்து, சம்பந்தப்பட்ட நபர்களின் பெயரில் எந்தவொரு அசையா சொத்தையும் பதிவுசெய்ய முடியாத நிலையை ஏற்படுத்த வேண்டும் என்றும் அந்த வழிமுறை குறிப்புகளில் கூறப்பட்டுள்ளது.
வரி ஏய்ப்பு செய்ப வர்களுக்கு சமையல் கியாஸ் சிலிண்டர் மானியத்தை ரத்துசெய்ய நிதித்துறை அமைச்சகத்துக்கு முறையீடு செய்ய வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழிமுறைகளை பின்பற்றி, வரி ஏய்ப்பு செய்கிறவர்கள்மீது வரி மீட்பு அதிகாரிகள் (டி.ஆர்.ஓ.) உரிய நடவடிக்கை எடுக்கிறார்களா என கண்காணிக்குமாறு வருமான வரித்துறை முதன்மை கமிஷனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக வரி ஏய்ப்பு செய்கிறவர்களின் சொத்துகளை ஜப்திசெய்வதுடன், அவ்வாறு ஜப்தி செய்தவற்றை ஒரு வருட காலத்திற்குள் விற்பனை செய்வதிலும் வரிமீட்பு அதிகாரிகளின் செயல்பாடுகளை வருமான வரித்துறை முதன்மை கமிஷனர்கள் கண்காணிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
வருமான வரி ஏய்ப்பு செய்கிற வர்களின் எண்ணிக்கை எப்படி அதிகரித்து வருகிறதோ, அதே போன்று வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத வர்களின் எண்ணிக்கையும் பெருகிவருகிறது. இதற்கும் முடிவு கட்ட நடவடிக்கை பாய்கிறது.
வருமான வரிச் சட்டம் பிரிவு 139 (1) படி வருமான வரி கணக்கினை ஒருவர் தாக்கல் செய்யவேண்டும். அப்படி தாக்கல் செய்யாதபோது அவர் மீது அதேசட்டத்தின் பிரிவு 271 எப்– படி, ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப் பட்டுள்ளது.
இதற்கிடையே வரி ஏய்ப்பு செய்கிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய நேரடிவரிகள் வாரியம் அறிக்கை ஒன்றை நேற்றுவெளியிட்டது.
அதில், கடந்த வாரம் நடந்த வருமான வரித் துறை அதிகாரிகள் கூட்டத்தில் இந்த வழிமுறைகள் அதிகாரிகளிடம் சுழற்சிக்கு விடப்பட்டதாகவும், வருமானவரி செலுத்தாமல் ஏய்க்கிறவர்களை கைதுசெய்து, காவலில் வைத்து நடவடிக்கை எடுப்பதற்கு வருமான வரிசட்டத்தில் ஏற்கனவே விதிமுறைகள் இருப்பதாகவும், ஆனால் அவை மிகவும் அபூர்வமாகவே அமல்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ... |
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.