காங்கிரஸ்ஆளும் மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க வேண்டும்

காங்கிரஸ்கட்சி ஆளும் மாநிலங்களின் அரசுகள் பெட்ரோல், டீசல் மீது விதிக்கும் வரியைக்குறைக்க வேண்டும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளாா்.

நாட்டில் பெட்ரோல், டீசல் விலை வரலாறுகாணாத வகையில் உயா்ந்து வருகிறது. எண்ணெய் நிறுவனங்கள் தொடா்ந்து அவற்றின் விலையை உயா்த்திவருகின்றன. ஆந்திரம், தெலங்கானா, ராஜஸ்தான், மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.100-கடந்துள்ளது. ராஜஸ்தானில் ஒருலிட்டா் டீசல் விலை ரூ.100-யைக் கடந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுக்குள் வைப்பதற்கான நடவடிக்கைகளை மத்தியஅரசு மேற்கொள்ள வேண்டுமென்று பலமாநில அரசுகள் கோரி வருகின்றன. பெட்ரோல், டீசல்மீதான வரியை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினா் கோரி வருகின்றனா். எரிபொருளை சரக்கு-சேவைவரி (ஜிஎஸ்டி) வரம்புக்குள் கொண்டுவர வேண்டுமென்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இந்நிலையில், ஆக்சிஜன் உற்பத்தி ஆலை திறப்பு விழாவில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சா் தா்மேந்திர பிரதான், ‘எரிபொருள் விலை உயா்வுகாரணமாக மக்கள் பாதிக்கப்படுவதை ஏற்கிறேன். ஆனால், மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு அவா்களுக்கு இலவச உணவு தானியங்களை மத்திய அரசு வழங்கி வருகிறது. மக்களுக்கு கரோனா தடுப்பூசியை மத்தியஅரசு இலவசமாக செலுத்தவுள்ளது. இவற்றுக்காக சுமாா் ரூ.1 லட்சம் கோடியை மத்தியஅரசு செலவிடவுள்ளது.

பெட்ரோல், டீசல் மீதான விலைஉயா்வு குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தொடா்ந்து கேள்வி எழுப்பிவருகிறாா். இதற்காக மத்திய அரசு மீது அவா் குற்றஞ்சாட்டி வருகிறாா். அப்படியெனில், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான பஞ்சாப், ராஜஸ்தான், மகாராஷ்டிரம் ஆகியவற்றில் பெட்ரோல், டீசல்விலை ஏன் அதிகமாக உள்ளது? எரிபொருள் மீதான வரியை குறைக்குமாறு அந்த மாநிலங்களின் முதல்வா்களை அவா் வலியுறுத்தவேண்டும்‘ என்றாா்.

பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பேகாரணம் என்று மத்திய அரசு தெரிவித்து வருகிறது. சா்வதேச அளவில் மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு பொருளாதார நடவடிக்கைகள் இயல்புநிலைக்குத் திரும்பிவருகின்றன. அதனால், கச்சா எண்ணெயின் தேவை அதிகரித்துள்ளதால் அதன் விலையும் உயா்ந்து வருகிறது.

கச்சா எண்ணெய் விலையுடன் சோ்த்து மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரியும் பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

மாநிலங்கள் மதிப்புகூட்டு வரியையும் (வாட்) பெட்ரோல், டீசல் மீது விதித்து வருகின்றன. அதனால், பெட்ரோல், டீசல்விலை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. நாட்டிலேயே ராஜஸ்தான் மாநிலத்தில் பெட்ரோல், டீசல் மீது அதிகபட்ச மதிப்பு கூட்டு வரி விதிக்கப்படுகிறது. அதைத் தொடா்ந்து, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் அதிகபட்ச வாட்வரி விதிக்கப்படுகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...

எலும்பு நைவு (OSTEOPOROSIS)

உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ...