“என் கடன் பணி செய்து கிடப்பதே”.

மத்திய ரயில்வே அமைச்சகத்தால், ரயில் பயணிகளின் வசதிகளை மேம்படுத்தும் வகையில் அண்மையில் புதிதாக நியமிக்கப்பட்ட பயணிகள் வசதிகள் மேம்பாட்டு கமிட்டி (Passenger Amenities Committee) இன்று புது
தில்லியில் அமைந்துள்ள நிஜாமுதீன் மற்றும் அதற்கு அருகில் உள்ள பரிதாபாத் ரயில் நிலையங்களில் நேரடி ஆய்வு மேற்கொண்டது. இந்தியாவின் தென்கோடியிலிருந்து இயங்கும் ரயில்கள் தேசத்தின் தலைநகரான புது
தில்லிக்குள் நுழையும் முன்னர் அதன் வாயிற்படியாக அமைந்துள்ளவை இந்த இரு ரயில் நிலையங்கள். எனவே, ரயில் பயணிகளை பொறுத்தவரை இவ்விரண்டு ரயில் நிலையங்களும் மிகவும் முக்கியமானவையாக கருதப்படுகின்றன.

நிஜாமுதீன் ரயில் நிலையத்தைப் பொறுத்தவரை, மொத்தம் 189 அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில்கள் இந்நிலையத்தின் வழியாக செல்கின்றன. ராஜ்தானி, ஜன சதாப்தி மற்றும் நாட்டின் அதிவேக ரயிலான கதிமான் எக்ஸ்பிரஸ் ஆகியவை நிஜாமுதீன் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன. ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட கமிட்டியின் பல்வேறு ஆலோசனைகளை ரயில்வே துறை அதிகாரிகள் உடனடியாக செய்து தர ஒப்புக் கொண்டுள்ளனர். அதன்படி, இந்நிலையத்தில் உள்ள குளிரூட்டப்பட்ட ஓய்வு அறையில் அமைந்துள்ள ஏ.சி.மெஷின்கள் மாற்றப்பட்டு, புதிய மெஷின்கள் விரைவில் நிறுவப்படும். கழிப்பறைகள் தூய்மைப்படுத்துவதில் முன்னுரிமை வழங்கப்படும். தானியங்கி நடைமேடைகள் (escalators) ஒவ்வொரு நடைமேடையிலும் நிறுவப்படும். ஏற்கனவே,


முதல் எண் கொண்ட நடைமேடையில் இவ்வசதி உள்ளது. பிற நடைமேடைகளிலும் இவை இன்னும் சில மாதங்களிலேயே பொருத்தப்படும். கமிட்டியின் உறுப்பினர்களின் ஆலோசனைப்படி, நடைமேடைகளில் லிப்ட் வசதி செய்து தர ரயில்வே நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு மற்றும் கேரளாவிலிருந்து வரும் ரயில் வண்டிகளில் பயணிக்கும் பயணிகள், இந்த ரயில் நிலையத்தில் இறங்கும் பொழுது எதிர்நோக்கி வரும் முக்கியமான பிரச்சினை மொழிப் பிரச்சனை. இது குறித்து கமிட்டியின்
உறுப்பினர் ஆசீர்வாதம் ஆச்சாரி ரயில்வே அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்த போது இதற்கான தக்க நடவடிக்கையை எவ்வாறு எடுப்பது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. முதல் எண் கொண்ட நடைமேடையில் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான தகவல்களை வழங்கும் ஒரு கவுண்டர் அமைத்து, அந்த கவுண்டரில் தமிழ் மற்றும் மலையாளம் மொழி பேசும் தன்னார்வத் தொண்டர்களை நியமித்தால், முதல் முறையாக இங்கு வரும் பயணிகளுக்கு தேவையான தகவல்களை தர வாய்ப்பு ஏற்படுத்த முடியும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.


தேவைப்பட்டால், புது தில்லியில் இயங்கிவரும் தமிழ் மற்றும் கேரள சங்கங்களை அணுகுவது என்றும், அங்கிருந்து நாளொன்றுக்கு இரண்டு மணி நேரத்திற்கு தன்னார்வத் தொண்டுள்ளம் கொண்டவர்கள் கிடைக்கப்பெற்றால் இந்த வசதி வழங்குவதில் எந்த ஒரு சிரமும் இருக்காது. அவ்வாறு அமர்ந்துள்ள இவர்கள், பயணிகளுக்கு எங்கிருந்து ஆட்டோ மற்றும் டாக்ஸி வசதி பெறுவது, தில்லியில் உள்ள முக்கியமான சுற்றுலாத் தளங்கள் எவை எவை, குறைந்த செலவில் பாதுகாப்பாக தங்க எந்த ஓட்டல்கள் அருகில் உள்ளன போன்ற தகவல்களை தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளிலேயே தெரிவிக்க ஏற்பாடு செய்யப்படும்.

பரிதாபாத் ரயில் நிலையத்தில், ஏற்கனவே அமைந்துள்ள நடைப்பாலம் (Foot Over Bridge) பழுதடைந்துள்ளதை கமிட்டியின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். தங்களது தவறை உணர்ந்த அதிகாரிகள் உடனடியாக கூடுதலாக
ஒரு நடைப்பாலத்தை கட்ட முடிவு செய்துள்ளனர். அதற்கான ஒப்புதலை உடனடியாக பொது மேலாளரிடமிருந்து பெற்றும் கொண்டனர். இன்னும் ஆறு மாதங்களுக்குள் கூடுதலாக ஒரு நடைப்பாலம் செயல்பாட்டுக்கு வந்துவிடும் என்று உறுதியும் அளித்தனர்.

தங்களது ஆய்வினை முடித்த பின்னர், கமிட்டியின் உறுப்பினர்கள் வடக்கிந்திய ரயில்வேயின் பொது மேலாளர் ஏ.கே. புத்தியாவை நேரில் சந்தித்து தங்களது ஆய்வின் அறிக்கை குறித்து விவாதித்தனர். பயணிகளின் வசதிக்காக
மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளுக்கு தனது உத்தரவை அவர் உடனடியாக பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்குழுவின் உறுப்பினர்கள் ரமாதீன் சிங், எல்.பி. ஜெய்ஸ்வால்,டி.ஆர். கட்டாரியா, அசோக் திரிபாதி மற்றும் ஆசீர்வாதம் ஆச்சாரி இன்றையநேரடி ஆய்வில் பங்குகொண்டனர்.

நன்றி. ஆசீர்வாதம் ஆச்சாரி

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...

எலும்பு நைவு (OSTEOPOROSIS)

உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ...