ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கர வாதிகள் நடத்திய தாக்குதலில் 8 துணை ராணுவப் படை வீரர்கள் பலியாயினர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் பேம்பூர் பகுதியில் துணை ராணுவப் படை வீரர்களை ஏற்றிச்சென்ற வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பயங்கர வாதிகள் சிலர் வீரர்கள் சென்றவாகனம் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.
இச்சம்பவத்தில் 8 வீரர்கள் பலியாயினர். தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் பயங்கரவாதிகள் இருவர் கொல்ல்பட்டனர். மேலும் 24 பேர் படுகாய மடைந்தனர். தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா பொறுப்பேற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல்செய்தியை தெரிவித்துள்ள இந்திய பிரதமர் மோடி, இறந்த சிஆர்பிஎப்.. வீரர்களின் தியாகத்திற்கு தான் தலை வணங்குவ தாகவும், மேலும் அவர்களின் மறைவு தனக்கு பெரியவலியை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதில் காயமடைந்த விரர்கள் விரைவில் குணமாகவேண்டும் எனவும் இரங்கல் செய்தியில் குறிப்பிட் டுள்ளார்.
நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ... |
உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ... |
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.