சட்ட சபைக் கூட்டத்தொடரில் அதிமுக, திமுக உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் குறைகூறி பேசிவருகிறார்கள் , பொது மக்கள் பிரச்சனைக்காக அவர்கள் எதுவும் பேசவில்லை, சட்ட சபை தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் பாஜக பலம்பொருந்திய கட்சியாக உருவெடுத் துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சிதேர்தலில் பாஜக கணிசமான இடங்களில் வெற்றிபெறும். சட்ட சபைக் கூட்டத்தொடரில் அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் குற்றச்சாட்டை சுமத்தி குறை கூறி வருகின்றனர். இரு கட்சிகளுமே பேச்சில் யார்வல்லவர் என்று வாக்கு வாதம் செய்கிறார்கள். பொது மக்களின் பிரச்சனைக்காக இருகட்சிகளும் எதுவும் பேசவில்லை என்பது கண்டணத்திற்குரியது.
பழநியில் நடந்த 2 நாள் செயற்குழு, பொதுக் குழு கூட்டத்தில் உள்ளாட்சித்தேர்தல், சட்டசபை தேர்தல்தோல்வி குறித்து ஆராயப்பட்டது.உள்ளாட்சி தேர்தலில் தகுதியான வர்களை நிறுத்தி அதிக இடங்களில் வெற்றிபெற திட்டமிட்டுள்ளோம். இதற்காக 42 மாவட்டங்களில் செயற் குழு கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது.
மேட்டூர் அரசு மருத்துவ மனையில் கண் அறுவை சிகிச்சை பெற்ற 20 பேர் கண் பார்வை இழந்துள்ளதற்கு, நான் ஒரு டாக்டர் என்ற முறையில் மிகவும் வேதனைப் படுகிறேன். இது மன்னிக்க முடியாத குற்றம். சுகாதாரத் துறையின் அலட்சியத்தையே காட்டுகிறது. அரசு மருத்துவ மனைகளில் காப்பீடு திட்டத்தில் சரியான முறையில் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும். இதற்கு சுகாதாரத்துறை அமைச்சரே முழுப்பொறுப்பேற்க வேண்டும்.என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்
Leave a Reply
You must be logged in to post a comment.