பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் முதல்மந்திரிகள் மற்றும் மத்திய மந்திரிகள் பங்கேற்கும் மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில்கூட்டம் டெல்லியில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.
பிரதமர் தலைமையில் மாநில முதல்மந்திரிகள் மற்றும் மத்திய மந்திரிகளை உறுப்பினர்களாக கொண்ட மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் கடந்த 1990–ம்ஆண்டு அமைக்கப்பட்டது. மத்தியஅரசால் நடத்தப்படும் இந்த கவுன்சில்கூட்டம் இதுவரை 10 முறை கூட்டப்பட்டு உள்ளது.
கடைசியாக கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் 2006–ம் ஆண்டு இந்தகூட்டம் நடந்தது. கடந்த 2014–ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பா.ஜனதா அரசு, இந்த கவுன்சிலை புதுப்பித்தது. அத்துடன் உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் 5 மண்டலங்களை சேர்ந்த முதல்–மந்திரிகள் பங்கேற்ற கூட்டங்கள் தனித்தனியாக நடத்தப்பட்டது.
இந்த நிலையில் மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சிலின் 11–வது கூட்டம் இன்று (சனிக்கிழமை) டெல்லியில் நடக்கிறது. பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்–மந்திரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கவுன்சிலில் ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி, வெங்கையா நாயுடு, நிதின் கட்காரி, மனோகர் பாரிக்கர் ஆகிய மத்திய மந்திரிகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளனர். மேலும் சுரேஷ் பிரபு, சதானந்த கவுடா, ராம்விலாஸ் பஸ்வான், ரவிசங்கர் பிரசாத், ஹர்சிம்ரத் கவுர், ஜுவல்ஓரம், தாவர்சந்த் கெலாட், ஸ்மிரிதி இரானி, தர்மேந்திர பிரதான், பியூஷ்கோயல், நிர்மலா சீதாராமன் ஆகிய மந்திரிகள் நிரந்தர அழைப்பாளர்களாக உள்ளனர்.
மாநில முதல்–மந்திரிகளும், மத்திய மந்திரிகளும் பங்கேற்கும் இன்றைய கூட்டத்தில் மத்திய–மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகள்தொடர்பாக பஞ்சிகுழு வழங்கிய பரிந்துரைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. அத்துடன் ஆதார் அட்டைபயன்பாடு, நேரடி மானிய திட்ட பயன்பாடு, பள்ளிக்கல்வி மேம்பாடு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
மேலும் உள்நாட்டுபாதுகாப்பு, மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினைகள், உறவுகள், விவகாரங்கள் மற்றும் பொருளாதாரம், சமூகதிட்டங்கள் குறித்தும் விவாதம் நடக்கிறது.
10 ஆண்டுகளுக்குபின் நடைபெறும் இந்த கூட்டத்தின் மூலம் முதல்மந்திரிகளும், மத்திய மந்திரிகளும் ஒரே இடத்தில் சந்தித்து பேசும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே பெரும்பாலான முதல்–மந்திரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ... |
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.