அடுத்த 3 வருடத்திற்குள் அனைத்து வீடுகளுக்கும் மின்சார இணைப்பு வழங்கப்படும் சென்னை ஐ.ஐ.டி.யில் நடைபெற்றுவரும் ஆராய்ச்சி திட்டங்களை பார்த்த போது, உலக அளவில் தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணி நாடாக விளங்கும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் எண்ணம் நிறைவேறும் என்று நம்புகிறேன். இந்தியாவில் இளைஞர்கள் அதிகம்உள்ளனர். இந்தியாவில் இல்லாதவளமே இல்லை. இந்தியாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் புதிய தொழில் நுட்பங்களை உருவாக்குவார்கள்.
சென்னை ஐ.ஐ.டி.யின் ஆராய்ச்சித்துறை சூரிய வெளிச்சத்தில் இருந்து மின்சாரம்தயாரித்து, அதன்மூலம் குறைந்த அளவு மின்சாரத்தில் இயங்கக்கூடிய மின் விசிறி, மிக்சி, பல்பு, செல்போன் சார்ஜர் ஆகியவற்றை உருவாக்கி உள்ளனர். இது பாராட்டுக் குரியது. இவை புதிய தொழில்நுட்பத்தை காட்டுவதுடன், சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் உள்ளது. இந்தியாவில் வடமாநிலங்களில் பல கிராமங்களில் இன்னமும் மண்ணெண்ணை விளக்கில்படிக்கும் நிலை உள்ளது. விரைவில் அந்தநிலை மாறும். அடுத்த 3 வருடத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின்இணைப்பு வழங்கப்பட்டுவிடும்.
மோடி அரசு அமைந்தபின்னர் இந்தியாவில் மின்சார உற்பத்தி 23 சதவீதம் அதிகரித்துள்ளது. உதய் திட்டத்தில் தமிழ்நாடு சேரவில்லை. இந்ததிட்டத்தில் சேர்ந்தால் வருடத்திற்கு தமிழகத்திற்கு ரூ.7 ஆயிரம் கோடி வருமானம் வரும். .என்று மத்திய மந்திரி பியூஷ் கோயல் கூறினார்.
சென்னை ஐ.ஐ.டி.யில் மின்சாரம் மற்றும் பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் உற்பத்தி செய்வதற்கான மையத்திற்கு மத்திய மந்திரி பியூஷ் கோயல் நேற்று அடிக்கல் நாட்டி பேசியது:-
நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ... |
அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ... |
Leave a Reply
You must be logged in to post a comment.