பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயா வதியை, தரக்குறைவாக விமர்சித்த, உ.பி. மாநில பா.ஜ., துணைத்தலைவர் தயா சங்கர் சிங்கை 6 ஆண்டுகள் சஸ்பெண்ட்செய்த பா.ஜ., இச்செயலுக்காக, பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டுள்ளது.
உ.பி., மாநில பா.ஜ., துணைத்தலைவர், தயா சங்கர் சிங், தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களுக்கு, மாயாவதி சீட்டைவிற்பது, பாலியல் தொழிலாளியை விட மோசமானது என சர்ச்சை கருத்துதெரிவித்திருந்தார். இவரது இப்பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும்கண்டனம் தெரிவித்தன. ராஜ்யசபாவிலும், இந்தவிவகாரம் எதிரொலித்தது.
சர்ச்சை பேச்சுக்காக மாயா வதியிடம் சங்கர்சிங் பகிரங்க மன்னிப்புகேட்ட போதிலும் உ.பி., மாநில துணைத் தலைவர் பதவியிலிருந்து, சங்கர்சிங்கை பா.ஜ., தலைமை நீக்கியது. இதனிடையே பா.ஜ., தேசியதலைவர் அமித்ஷா தலைமையில் நடந்த கூட்டத்தில், தயாசங்கர் சிங்கை சஸ்பெண்ட் செய்ய முடிவுசெய்யப்பட்டது. இதனையடுத்து சங்கர்சிங் கட்சியிலிருந்து 6 ஆண்டுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இக்கூட்டத்தில் உ.பி., மாநில பா.ஜ., தலைவர் கேசவ் பிரசாத் மவுரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ... |
சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ... |
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.